Title of the document
*குழுப் பார்வை (Team Visit)*


*1.காலை வழிபாட்டுக் கூட்டம்:*

அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தாய் வாழ்த்து , நாட்டுப் பண் பிழையின்றி பாடுவதற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இன்றைய செய்தி ( தமிழ் & ஆங்கிலம்), திருக்குறள் & பழமொழி அதன் விளக்கம் , ஆசிரியர் உரை இடம்பெறுதல் வேண்டும்.


*2. பள்ளி வளாகம்:*

பள்ளி வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுதல் வேண்டும்.

குப்பைகளை எரிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படின் அதற்காக பள்ளி வளாகத்தில் Cement RCC Rings பயன்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் தேவையற்ற பொருட்கள் இருப்பின் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்

*3. வகுப்பறைகள்:*

வகுப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்.  ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு dustbin இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மிதியடிகள் வகுப்பிற்கு வெளியே வரிசையாக விடப்பட்டிருக்க வேண்டும்.

காற்றோட்டமான போதிய வெளிச்சத்துடன் கூடிய வகுப்பறையாக இருக்க வேண்டும்.

TLM / மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

கரும்பலகைகள்  (கீழ்மட்டக் கரும்பலகைகள் உட்பட) வண்ணம் தீட்டப்பட்டு பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

மின்சாதனப் பொருட்கள் மற்றும் மின் இணைப்புகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

*4. கழிவறைகள்:*

மாணவர்கள் அனைவரும் கழிவறையை பயன்படுத்தும் வகையில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

தினந்தோறும் தூய்மைப்படுத்தப்பட்டு தண்ணீர் வசதியுடன் ( with soap) இருக்க வேண்டும்.


*5. ஆசிரியர் செயல்பாடு:*

அனைத்து மாணவர்களும் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருகை புரிவதனை ஆசிரியர் உறுதிப்படுத்த வேண்டும்.

 முறையாக வருகை புரியாத மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

Lesson plan & TLM துணையுடன் வகுப்பு எடுக்க வேண்டும்.

Ennum Ezhuthum/SALM/ALM முறையில் வகுப்பு எடுக்க வேண்டும்.

மாணவர்களுடன் கலந்துரையாடல், கேள்வி கேட்டல், மதிப்பீடு, பாடப் பொருள் புரியும் வகையில் கற்பித்தல், கற்றல் விளைவு,.... ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தல்.

மாணவர்களின் குறிப்பேடுகள், கட்டுரை ஏடுகள், .... முறையாக அவ்வப்பொழுது திருத்தம் மேற்கொண்டு தேதியுடன் கையொப்பம் இடுதல்.

*6. பதிவேடுகள்:*

பள்ளியின் அனைத்து பதிவேடுகளும் 
 புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

*7. எண்ணும் எழுத்தும்:*

களங்கள் முறையாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தந்த வாரத்திற்கான செயல்பாடுகள் ( TLM) புதுப்பிக்கப்பட வேண்டும்.

ஆசிரியர் கையேட்டின் அடிப்படையில் வகுப்பறைச் செயல்பாடு அமைய வேண்டும்.

பயிற்சி ஏடுகளில் மாணவர்கள் முறையாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

*8. SALM:*

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இம்முறையில் பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.

Trays முறையாக பயன்படுத்தப்பட வேண்டும்.


*9. ALM:*

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையில் பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.


புதிய வார்த்தைகள் ,மன வரைபடம், தொகுத்தல்,.... ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தல்.

*10. கட்டுரை ஏடு:*

மாதத்திற்கு ஒரு கட்டுரையென எழுதப்பட்டு ஆசிரியரால் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். தேதியுடன் கையொப்பம் இட வேண்டும்


கரும்பலகையில் எழுதிப் போட்டு அதனை அப்படியே மாணவர்களை எழுதச் செய்யக்கூடாது.


முதலில் தலைப்பினை தெரிவித்து அது சம்பந்தமாக மாணவர்களுக்கு தெரிந்த கருத்துகளை எழுதி வரச் செய்து திருத்தம் செய்து அதன் பிறகு கூடுதல் தகவல் அளித்து மனப்பாடம் செய்து வரச் சொல்லி அதன் பிறகு கட்டுரை ஏடுகளில் எழுதப் பழக்க வேண்டும்.

*11. மெல்லக் கற்கும் மாணவர்கள்:*

நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாவில் தமிழ் நாளும் தமிழ், A Journey For Blooming, கணித திறவுகோல் ஆகிய கையேடுகள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட வேண்டும்.

Bridge Course Books பயன்படுத்துதல்.


செயல் திட்டம் அமைத்து மாணவர்களின் அடிப்படை எண்ணறிவு & எழுத்தறிவு மேம்படுத்தப்பட வேண்டும்.

*12.STEM:*

வானவில் மன்றச் செயல்பாடுகளை முறையாக செயல்படுத்துதல்.

*13.ITK:*

இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு  ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் செல்வதை உறுதிப்படுத்துதல்.

*14.GRANTS:*

பள்ளியின் தேவையின் அடிப்படையில் proceedings- ல் தெரிவித்துள்ளவாறு SNA மூலம் செலவினம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

SMC கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே செலவினம் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளியின் பெயர்ப் பலகை புதிப்பக்கப்பட்டிருக்க வேண்டும்.

அறிவிப்பு பலகையில் நிதி வரவு  விபரம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

புதிய பொருட்கள் வாங்கப்பட்டிருப்பின் இருப்பு பதிவேட்டில் பதியப்பட்டிருக்க வேண்டும்.

*15. EMIS:*
ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு தினந்தோறும் முறையாக குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்

Library books, PSTM,..... ஆகிய அனைத்து விவரங்களும் அவ்வப்பொழுது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக ஆதார் எண் பெற முழு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post