பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் - வாட்ஸ்அப்பில் வலம் வரும் செய்தி உண்மையா ?
- முன்னாள் மாநிலத்தலைவர்
கே.கங்காதரன்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
இன்று முழுதும் சமூக ஊடகங்களில் "புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் இதற்கான அறிவிப்பு வரும் நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் எ முதல்வர் அறிவித்தாகவும்" ஒரு செய்தி தாறுமாறாக ஓடியது. அப்படி ஒரு செய்தி அரசுத்தரப்பில் வெளியானதாக தெரியவில்லை.
கீழே உள்ள இந்த செய்தி அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ள வாட்ஸ்அப் குழுக்களிலும் இரண்டு நாட்களாக பார்வர்ட் செய்யப்பட்டு வருகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ள முதலமைச்சருக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நன்றி
திமுக தேர்தல் அறிக்கையில், ஒன்றிய அரசின் நெருக்கடியால் அடிமை அதிமுக அரசு கொண்டுவந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அடிமை அதிமுக அரசு ரூபாய் ஐந்தரை இலட்சம் கோடிக்கு மேல் கடன்சுமையை ஏற்றி, வட்டிக்கு வட்டி கட்டும் நிலையை ஏற்படுத்தி இருந்தது.
எனவே, ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், கொரோனா தொற்று, புயல் - மழை போன்ற இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களை காக்கும் பணியும் நடைபெற்றது.
அதேநேரத்தில், தமிழ்நாட்டின் வருவாயை அதிகரித்து, கடன்சுமையை இரண்டே ஆண்டுகளில் குறைத்து சாதனைப் படைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதனால், மாநிலத்தின் நிதிநிலை ஓரளவு சீராகி இருப்பதால், தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான, புதிய ஓய்வூதிய திட்டத்தை (CPS) யை இரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் (GPF/TPF) கொண்டுவர உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பு வரும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறுகிறது.
இதனையறிந்த 5 இலட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், IFHRM இல் சம்பளம் மற்றும் பிற பணப்பலன் பெற்று வழங்கும் initiator இல் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் வரும் 01/04/2023 நிதி ஆண்டு முதல், ஒவ்வொரு மாதமும் சம்பளத்துடன் தனிப்பட்ட ஊதியமாக (Personal Pay) ரூபாய் 2,000/- வழங்க முடிவு செய்யபட்டுள்ளது.
அதோடு, 30 ஆண்டுகள் பணிபுரியும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 58 ஆக குறைக்கப்படுகிறது.
இப்படி ஓர் அறிவிப்புக்கு போதுமான நிரப்பந்தம் இன்னும் எழவில்லை. தாளச்சங்கங்கள் எழுப்பும் ஓசை இப்போதும் வலுவாகவே உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்கான ஆதாயம் கருதி இந்த குழப்பம் கிளம்பி இருக்கலாம். ஆனால் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டதால இப்படியான அறிவிப்புகளுக்கு வாய்ப்பே இல்லை.
கவனம் சிதற வேண்டாம்.
வானம் வசப்படும் தூரம்தான்!
களம் கனலாகட்டும்!!.
- முன்னாள் மாநிலத்தலைவர்
கே.கங்காதரன்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
Post a Comment