Title of the document

பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கோரும்போது இணைக்கப்பட வேண்டியவை என்னென்ன ? - DEO Proceedings

பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of District Education Officer (Elementary Education)

 

பணிவரன்முறை, தேர்வுநிலை, சிறப்பு நிலை, Selection Grade, Special Grade, Regularisation,
பணிவரன்முறை, தேர்வுநிலை, சிறப்பு நிலை, Selection Grade, Special Grade, Regularisation, 

 

Selection Grade/Special Grade - Karur DEO Proceeding - Click Here to Download PDF

 

Selection Grade/Special Grade - Thiruvannamalai DEO :

பணிவரன்முறை கோரும் போது இணைக்கப்பட வேண்டியவை : 

1 ஆசிரியரின் விண்ணப்பம் 

2. பணிவரன்முறை கோரும் படிவம் 

3 நியமன ஆணை அசல் மற்றும் நகல் 

4 . கல்விச் சான்றுகள் அசல் மற்றும் நகல் 

5 . 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் உண்மைத் தன்மை சான்று 

6. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும்உண்மைத் தன்மை சான்று 

7 . இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்று / இளங்கலை பட்டச் சான்று நகல் மற்றும் உண்மைத் தன்மை சான்று 

8. தொழிற்கல்வி சான்று நகல் மற்றும் உண்மைத் தன்மை சான்று நகல் 

9 , பதவி உயர்வு பெற்ற பணியிடத்தில் பணிவரன்முறை எனில் கீழ்பதவியில் நியமன ஆணை நகல் / பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் ஆணை நகல்கள் அத்தாட்சி செய்யப்பட்டு இணைக்கப்படவேண்டும் . 

தேர்வுநிலை / சிறப்புநிலை கோரும் போது இணைக்கப்பட வேண்டியவை : 

1 ஆசிரியரின் விண்ணப்பம்

 2 தேர்வுநிலை / சிறப்புநிலை கோரும் ( படிவத்தில் தகவல்கள் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட பக்க எண் மற்றும் தொகுதி குறிப்பிடப்படவேண்டும் . 

3. பதிவுத்தாள் பணியாளர் பணியில் சேர்ந்த தேதி முதல் பதிவுச் செய்யப்படவேண்டும் .

 4. பணிக்காலம் சரிபார்ப்பு படிவம் 

5. நியமன ஆணை நகல் 

6. பணிவரன்முறை ஆணை நகல் 

7. தகுதிகாண் பருவம் முடித்த ஆணை நகல் இணைக்கப்படவேண்டும் 

8. சிறப்புநிலை எனில் தேர்வுநிலை ஆணை நகல் இணைக்கப்படவேண்டும் 

9. பதவி உயர்வு பெற்ற பணியிடத்தில் தேர்வுநிலை / சிறப்புநிலை எனில் பதவி உயர்வு ஆணை நகல் / பணிவரன்முறை ஆணை நகல் இணைக்கப்படவேண்டும் 

10.10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் உண்மைத் தன்மை சான்று 

11. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் உண்மைத் தன்மை சான்று

 12. இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்று / இளங்கலை பட்டச்சான்று நகல் மற்றும் உண்மைத்தன்மை சான்று

 13. தொழிற்கல்வி சான்று நகல் மற்றும் உண்மைத்தன்மை சான்று நகல் 

14. ஆசிரியர் தகுதிச் சான்று TET சான்று உண்மைத் தன்மை நகல் 

15. பணியில் சேர்ந்த பின்பு உயர்கல்வி பயின்று இருப்பின் துறையின் முன் அனுமதி பெற்ற ஆணை நகல் , 

16. போரட்ட காலத்தில் கலந்து கொண்ட நாட்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளது சார்பாக ஆய்வு செய்து கருத்துரு அனுப்பப்பட வேண்டும் .

                     -  மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) திருவண்ணாமலை ,

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. Any one sent me passport apply now certificate pdf

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post