2009 &TET இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு (aasiriyarmanasu) !
2009 &TET |
நமது உயிர் ஒற்றைக் கோரிக்கையான மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான "சம வேலைக்கு" "சம ஊதியம்" ஆளும் திமுக அரசு தேர்தல் அறிக்கை எண் -311 ஐ விரைந்து நிறைவேற்ற மற்றொரு முயற்சியாக மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் புதிதாக உருவாக்கியுள்ள ஆசிரியர் மனசு (பெட்டி)என்ற ஒரு புதிய திட்டத்தில் ஆசிரியர்களின் குறைகளை அனுப்பினால் நேரடியாக மாண்புமிகு அமைச்சரின் கவனத்திற்கு செல்கிறது, ஒட்டு மொத்தமாக 20 ஆயிரம் ஆசிரியர்களும் இக்கடிதத்தினை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கவனத்திற்கு கடிதம் வழியாக கொண்டு சென்றால் நமது பாதிப்பின் வீரியமும் ஒற்றுமையும் தெரியவரும். அதன் மூலமாக நமது பிரச்சனை விரைவாக முடிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அமைச்சர் கண்டிப்பாக எடுப்பார் என்ற நம்பிக்கையும் நமக்கு உள்ளது.👍🏻👍🏻👍🏻
நம்முடைய 13 ஆண்டு கால ஒற்றை கோரிக்கை நிறைவேற்றக்கோரி கீழ்கண்ட E-Mail க்கு தங்களது பெயர், பள்ளி முகவரி, பணிபுரியும் மாவட்டத்தை நிரப்பி கையொப்பமிட்டு அனுப்பிடவும்.
கடித நகல் அனுப்ப முடியாதவர்கள் கீழ்கண்ட முகவரியில் இந்த டெஸ்ட் மெசேஜை COPY- PASTE செய்து அனுப்பவும்.
📌📌📌📌📌📌📌📌
aasiriyarmanasu@gmail.com
தொடர் முயற்சியே விரைவான வெற்றியைத் தரும் வெற்றிக்கான அனைத்து வழிகளையும் பாதிக்கப்பட்ட 20,000 ஆசிரியர்களும் பாகுபாடு இன்றி செய்து விரைவில் வெற்றி பெறுவோம்.
ஒன்றுபடுவோம் போராடுவோம்...!! போராடுவோம் வெற்றி பெறுவோம்...!!🤝🤝🤝
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்...!!💪🏻💪🏻💪🏻
செய்தி பகிர்வு
✍🏻✍🏻 மாநில தலைமை
SSTA-2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு
கடித நகல் அனுப்ப முடியாதவர்கள் கீழ்கண்ட முகவரியில் இந்த டெஸ்ட் மெசேஜை COPY- PASTE செய்து அனுப்பவும்.
அனுப்புநர் :
பெறுநர் : மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், ஆசிரியர் மனசுத் திட்டம், திருச்சி.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் வாக்குறுதி எண். 311 – 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு – ”சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கி – ’சமூகநீதி’ காக்க வேண்டுதல் - சார்பாக.
01.06.2009க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 12 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 01.06.2009க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 8370/- என்றும் அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 5200/- என்றும் ’ஒரே பணி’, ’ஒரே பதவி’, ’ஒரே கல்வித்தகுதி’ என அனைத்தும் ஒரே மாதிரி இருந்தபோதிலும், ஒரே விதமான ஊதியம் வழங்காமல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு தீர்ப்புகளில் ”சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டும் என்ற உரிமைகளைப் புறந்தள்ளி, இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டு, ’சமூகநீதி’ மறுக்கப்பட்டுள்ளது. இதைக் களையக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதில் குறிப்பாக 2018 ஆம் ஆண்டு மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது ’சமூகநீதி’ காக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நேரில் வந்து, எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, உடனடியாக இப்பிரச்சனை களையப்பட வேண்டும் என அறிக்கை வெளியிட்டு, எங்களுக்கு முழு ஆதரவாக இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கை வரிசை எண். 311ல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு ”சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கப்படும் என்ற கோரிக்கையை முதல்வரின் தனிக்கவனத்தால் இடம்பெறச் செய்தார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ’ஆசிரியர் மனசு’ திட்டத்தால் ஆசிரியர்களாகிய நாங்கள் பெருமை கொள்கிறோம். கழகத்தின் பாரம்பரிய திராவிடக் குடும்பத்தில் இருந்து வந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்று, திறம்படச் செயல்பட்டு வரும் தங்களை, சகோதரராக நாங்கள் கருதுகிறோம். 2009ல் பணியில் சேர்ந்தவர்கள் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்று வருகின்றனர். தாங்கள் இப்பிரச்சனையை முதல்வரின் தனிக்கவனத்திற்கு கொண்டு சென்று, நமது திராவிட முன்னேற்றக்கழகத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ”சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கி, எங்களின் வாழ்வில் ஒளி ஏற்றி, ’சமூகநீதி’ காக்கும் பாதுகாவலனாக திராவிட முன்னேற்றக்கழக அரசு என்றும் திகழும் என்பதை பறைசாற்றிட கேட்டுக்கொள்கிறேன். கல்வியில் தமிழகத்தை தேசத்தின் முதன்மை மாநிலமாக மாற்றும் மாண்புமிகு தமிழக முதல்வரின் முயற்சிக்கு என்றென்றும் பாடுபடுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
இப்படிக்கு,
நாள்:
Post a Comment