Title of the document

 Today School Morning Prayer Activities - 19.09.2022

_20180701_211806

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 19.09.2022

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: இரவச்சம்

குறள் : 1070

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்.


பொருள்:

இருப்பதை ஒளித்துக்கொண்டு இல்லை என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?


பழமொழி :

 A merry heart goes all the way.

மகிழ்ச்சி அனைத்துச் செயல்களையும் எளிதில் சாதிக்கும்


இரண்டொழுக்க பண்புகள் :

1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.


 2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன்.


பொன்மொழி :

ஒருவனை அகந்தை ஆட்கொண்டால் – அழிவு அவன் தலைமுறையையும் ஆட்டுவிக்கும்.


பொது அறிவு :

1.எல்லா வகை ரத்தத்தினுடனும் சேரும் ரத்த வகை குரூப் எது?

 ' ஓ 'பாசிஸிடிவ் - O positive

 2. ஒரு துளி ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 30 கோடி.

English words & meanings :

pro·hib·i·t - prevent some one from doing something by law. The ivory business between states is prohibited. Verb. ஒரு காரியம் செய்ய சட்ட படி தடை செய்வது. வினைச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

வல்லாரை ஆங்கிலத்தில் பிராமி என்று அழைக்கப்படுகிறது. இது. பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க இது உதவியாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 


செப்டம்பர் 19 இன்று

சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் பிறந்தநாள்

சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 19, 1965) ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார்[1]. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்[


நீதிக்கதை

அன்னமும் காகமும்

பசுமை நிறைந்த அழகிய கிராமம். புழுதி பறக்கும் மண்சாலை இருந்தது. புழுதி பறக்கும் மண்சாலையைத் தாண்டினால் சிறிய மலைக்குன்று ஒன்று இருந்தது. அந்தக் குன்றின் மேலே ஏறுவதற்கு சரியான பாதை இல்லை! பாதையில்லாததால் மலைக்குன்றில் மனித நடமாட்டம் இல்லாமல் அமைதியாய் இருந்தது. அந்த அமைதிதான், மலைகுன்றில் உள்ள பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் சந்தோஷத்தை உண்டாக்கின. பெரியமரங்கள் அவ்வளாவாக அக்குன்றில் வளரவில்லை. எனவே, அக்குன்றில் வாழும் பறவைகள், மலைக்குன்றின் குகைக்குள் சிறிய பொந்துகளில் கூடுகட்டி அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ்ந்து வந்தன.

பறவைகளின் அன்னப்பறவை ஒன்று, ஒரு குகைக்குள் பொந்து ஒன்றில், தன் குஞ்சுகளோடு இருந்தது, தாய் பறவையான அன்னம் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் விடாது மழைப் பெய்தது. மழையால் அன்னப்பறவையும், அதன் குஞ்சுகளும் குளிரால் நடுங்கியபடியே கூட்டைவிட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்தன.

அந்த நேரத்தில்தான் மழையில் நனைந்தபடியே பறந்து வந்த காகமொன்று, அன்னப்பறவையின் கூட்டிற்கு அருகே குளிரால் நடுங்கியபடியே நின்றது.

வெடவெடவன நடுங்கியபடியே அன்னமே! அன்னமே! ரொம்ப குளிரா இருக்குது! கொஞ்ச நேரம் ஒன்னோட கூட்டுல தங்கிக் கொள்கிறேன். மழை நின்றவுடன் பறந்து விடுவேன், உதிவ செய்யேன் என கெஞ்சியது.

காகத்தின் கெஞ்சல், அன்னப்பறவைக்கு இரக்கம் ஏற்பட்டது. ஆதலால் காகமே தாராளமாக தங்கி கொள்! மழை விட்டவுடன் செல்லலாம் என அனுமதியளித்தது. காகமும், அன்னப்பறவையின் கூட்டில் குளிரைப் போக்கி கொள்ள தங்கியது.

சிறிது நேரத்தில் மழை நின்றது. அன்னப்பறவைக்கு நன்றி சொல்லவிட்டு, காகம் பறக்க தயாரானது. பறக்க ஆரம்பிக்கும் பொழுதே, அந்த இடத்தில எச்சமிட்டது.

நாட்கள் பல கடந்து ஆண்டுகள் சில சென்றவுடன் காகம் எச்சத்தில் இருந்து ஆலவிதைகள் முளைத்து செடியாகி, பின் மரமாய் வளர்ந்தது.

மரத்தில் கிளைகளும், விழுதுகளும் தோன்றி பெரிய ஆலமரமாய் காட்சியளித்தன. ஆலமரத்தின் விழுதுகள் குன்றின் அடிவரை சென்றது.

மலைக்குன்றை ஏறமுடியாத வேடன் ஒருவன், ஆலவிழுதினை பிடித்து மேலேறி சென்றான். அங்கே குன்றின் பொந்தில் உள்ள அன்னப்பறவையும், அதன் குஞ்சுப்பறவைகளையும் பிடித்து தன்னுடைய கூடையில் போட்டுக் கொண்டு இறங்கினான். சந்தோஷமாக இருந்த அன்னப்பறவையும், அதன் குஞ்சுகளும் கவலையாய் இருந்தன.


இன்றைய செய்திகள் - 19.09.22

* தமிழகத்தில் விளம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விவசாய நிலம் வாங்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

* தமிழக பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் மறுசீரமைப்பு: கூடுதலாக பதவிகள் உருவாக்கி அரசாணை வெளியீடு.

* சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் தந்தத்தால் ஆன பெரிய மணி கண்டெடுப்பு.

* தமிழகத்தில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.

* 8 ஆண்டுக்கும் மேலாக குறைகள் நிவர்த்தி செய்யப்படாத 13,147 மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் இருந்து அகற்றம்.

* ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வின் பாதுகாப்பிற்காக, இந்திய மதிப்பில் சுமார் 59 கோடி ரூபாய் தொகை செலவிடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* மாநில கைப்பந்து போட்டி: 2-வது இடம் பிடித்த போலீஸ்துறை அணிக்கு டி.ஜி.பி. பாராட்டு.

* சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி- லுசா ஸ்டெபானி இணை சாம்பியன் பட்டம் வென்றனர்.


Today's Headlines

* The Government of Tamil Nadu has announced that 50 percent or a maximum of Rs 5 lakh subsidy will be given to Adi Dravidians and tribals in the state of Vlambu to purchase agricultural land.

 * Administrative Reorganization of Tamil Nadu School Education Department: Creation of Additional Posts has been released

 * A large ivory bell was found in the bottom excavation near Tiruppuvanam, Sivagangai district.

 * Chance of light rain with thunder and lightning in Tamil Nadu: Meteorological Department information.

 * 13,147 petitions which have not been redressed for more than 8 years will be removed from the Supreme Court.

*  According to reports, around 59 crore Indian rupees will be spent on security for Queen Elizabeth II's funeral.

 * State Volleyball Tournament: DGP Appreciated Police Team for securing second place .

 * Chennai Open Tennis: Gabriella Dabrowski-Lusa Stefani won the doubles title.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post