Title of the document

School Morning Prayer Activities - 22.09.2022 

School Morning Prayer Activities

School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.09.2022


திருக்குறள் :
பால்:இன்பத்துப்பால்

இயல்: களவியல்

அதிகாரம்: குறிப்பறிதல்

குறள் : 1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

பொருள்:
பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்

பழமொழி :

Good actions carry their warrant with them.

நல்லதை செய்பவர்கள் நல்லதையே பெறுவார்கள்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.

2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன்.

பொன்மொழி :

நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அது தான் வாழ்வை தீர்மானிக்கும்.

பொது அறிவு :

1.சக்தி தரும் வெப்பத்தின் அலகு என்ன ?

கலோரி.

2.ஆல்டிமீட்டர் எதை அளக்கிறது?

உயரத்தை.

English words & meanings :
scrump·tious - Greatly pleasing to the taste. Adjective. "My mother made a scrumptious chocolate ice-cream". அதி ருசியான உணவு. பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :
வல்லாரை உங்க நினைவாற்றலை அதிகரிக்கும் அதிசய மூலிகை. நினைவாற்றல் மற்றும் செறிவிற்கு காரணமான மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இது நேர்மறையான விளைவை ஏற்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கிறது. எனவே மாணவர்கள் இந்த கீரையை அடிக்கடி எடுத்து வந்தால் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். இது அவர்களின் தேர்வுக்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். பிராமி மூலிகையின் தோற்றமே மூளை வடிவத்தில் காணப்படுவது இதன் சிறப்பு. அதனால் நம் மூளையின் செயல்பாட்டிலும் பெரிய பங்காற்றுகிறது.

NMMS Q 65:
Circle: Circumference :: Square : ? a) Angle b) Area c) Diagonal d) Perimeter

Answer : Perimeter


செப்டம்பர் 22


மைக்கேல் பரடே அவர்களின் பிறந்தநாள்





மைக்கேல் பரடே (Michael Faraday, செப்டெம்பர் 22, 1791 – ஆகஸ்டு 25, 1867)), பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவியாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே.

மைக்கேல் பரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.

நீதிக்கதை

நிம்மதி

என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றான் ஒரு அரசன், ஞானியிடம். உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.? என்று ஞானி கேட்டார். என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை என்றான்.


அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு என்றார் ஞானி. எடுத்துக் கொள்ளுங்கள் என்றான் மன்னன். நீ என்ன செய்வாய் என்றார் ஞானி. நான் எங்கோ சென்று ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன் என்றான் அரசன். எங்கோ சென்று தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன் என்றார்.


சரி என்றான் மன்னன். ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான். அது கிடக்கட்டும் என்ற ஞானி நீ இப்போது எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன். முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா....??? இல்லை அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்...??? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்....??? விழித்தான் அரசன்.


ஞானி சொன்னார். அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது என்னுடையது இல்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் என்னுடையதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் என்னுடையதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.

இன்றைய செய்திகள்
22.09.22

* 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை தமிழகத்தில் அமைத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


* தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* சட்டப்பேரவை கூட்டத் தொடரை அக்டோபரில் நடத்த திட்டம் - அலுவல் ஆய்வு கூட்டத்துக்கு பிறகு தேதி அறிவிக்கப்படும்.


* இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் அக்.22-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.


* எங்களிடம் இன்னும் நிறைய ஆயுதங்கள் இருக்கின்றன - புதினின் பகிரங்க மிரட்டல். உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்துகிறார் ரஷ்ய அதிபர் படின்


* முதன் முறையாக மோட்டோ ஜிபி பைக் பந்தயத்தை நடத்தும் இந்தியா.


* மாநில பீச் வாலிபால் போட்டி நாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்.


* 2023ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் - ஐசிசி அறிவிப்பு.


Today's Headlines


* The Government of Tamil Nadu has ordered the establishment of India's first Sea Sponge Sanctuary in Tamil Nadu with an area of ​​448 square kilometers.


* The High Court has ordered a ban on conducting typing tests in Tamil Nadu.


* The date will be announced after the plan-to-work review meeting to hold the session of the Legislative Assembly in October.


* ISRO will launch 36 satellites of UK's OneWeb on October 22 with GSLV Mark-3 rocket.


* We have more weapons - Putin's public intimidation.


* India to host MotoGP bike race for the first time


* State beach volleyball tournament starts today at Nagapattinam.


* 2023 World Test Championship Final Venue - ICC Announces


Prepared by

Covai women ICT_போதிமரம்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post