பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி
அன்பில் மகேஷ் |
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருவமழை தொடங்கவுள்ள நிலையில், டெங்கு மற்றும் இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment