மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜூலை - டிசம்பர் காலத்துக்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். பண்டிகைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது. இதனால் சுமார் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
Post a Comment