அலகு விட்டு அலகு மாறுதல் - ஆசிரியர்கள் இடம் மாற நிபந்தனை !
தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, தொடக்க கல்வி பிரிவில் இருந்து, பள்ளிக்கல்வி பிரிவுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், புதிய இடங்களுக்கு செல்லும் வகையில், பழைய இடத்தில் இருந்து அவர்களை விடுவிக்க, முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட
ஆசிரியர்கள், தொடக்க கல்வி இயக்குனரகத்தின் தடையின்மை சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும். மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், அரசுக்கு செலுத்த
வேண்டிய தொகை ஏதும் நிலுவையில் இருக்கக்கூடாது என்ற நிபந்தனைகளை
சரிபார்த்து, தற்போது பணியில் உள்ள இடத்தில் இருந்து விடுவிக்க
வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment