அரசு ஊழியர் குழந்தை பிறந்தபின் , சிறிதுகாலத்தில் இறந்தால் 365 நாள் மகப்பேறு விடுப்பு உண்டா? தெளிவுரை
மகப்பேறு விடுப்பு தெளிவுரை : நாள் : 02.05.2022
மனுவின் மீது கீழ்க்கண்டவாறு பதிலளிக்கப் படுகிறது :
தனியர் மனுவில் கோரியுள்ள பொருண்மை தொடர்பாக , அரசு ஆணை நிலை எண் .84 , ப.ம.நி.சீ ( அவி .3 ) துறை நாள் 23.08.2021 - ன்படி , " A competent authority may grant maternity leave on full pay to permanent married women Government servants and to non permanent married women Government servants who are appointed on regular capacity , for a period not exceeding 365 days which may spread over from the preconfinement rest to post confinement recuperation at the option of the Government servant " என குறிப்பிடப்பட்டுள்ளதால் , ஓர் அரசு ஊழியர் குழந்தை பிறந்தபின் , சிறிதுகாலத்தில் இறந்த நிலையிலும் , மேற்கூறிய அரசாணைபடி 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு post confinement recuperation என்ற அடிப்படையில் முழுமையாக துய்க்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment