Title of the document

NMMS தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர் நினைவூட்டல்கள்



🔹 மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையம் சென்று விடுங்கள். பதற்றம் தவிர்கலாம். காலை 8.30 - 9.00

🔸 தேர்வு நேரம் 9.20 - 9.25 தேர்வறை செல்லுதல்

🔹 9.25- 11.00 : MAT

11.00 - 11. 25

இடைவேளை

11. 25 - 1.00 : SAT

🔸 தேர்வு முடிந்தவுடன் கவனமாக OMR தாளினை தேர்வறை கண்காணிப்பாளரிடம்  வழங்கிய பின் - இரு வினாத்தாள்களை எடுத்து கொண்டு வெளியே வரலாம்.

🔹 முதல் முறை OMR தாளினை பயன்படுத்துபவர்கள்  விடை பகுதியில் சரியாக வட்டமாக Shade செய்யவும். அதன் மாதிரி கீழே தரப்பட்டுள்ளது.


🔸 கணினி மதிப்பீடு என்பதால் - இரு விடையை Shade செய்தாலோ - அல்லது ஒயிட்னர் மூலம் அழித்து வேறு ஒரு விடை Shade  செய்தாலோ அது தவறாக எடுத்து கொள்ளப்படும்


🔹 OMR தாளில் பெயர் - புகைப்படம் விவரம் பிரிண்ட் செய்யப்படுள்ளது. செய்ய வேண்டியவை - உங்கள் கையெழுத்து இடுதல், அறை கண்காணிப்பாளர் Present shade செய்து கையெழுத்து பெறுதல் மட்டுமே.

🔹 வினாத்தாளில் உட்பகுதிகளில் குறித்தல் கூடாது. இறுதி இரு பக்கம் Rough work செய்து பார்க்க வெள்ளை தாள் இணைக்கபட்டுள்ளது. அதில் செய்து பார்க்கலாம்.

🔸 OMR தாளினை கருப்பு பால் பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்தி shade செய்ய வேண்டும்.


🔹 பொதுவாக செய்யும் தவறு : 5 வது கேள்வி தெரியாததால் Shade செய்யாமல் விட்டிருப்போம். 6வது கேள்வி எழுதும் போது 5வது கேள்வியில் shade செய்வோம்.

அடுத்து வரும் அனைத்து வினாக்களும் தவறாக Shade செய்யும் வாய்ப்பினை உருவாக்கும்.

🔸எனவே ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்கும் போது வினா எண் பார்த்து shade செய்யவும்.

🔹 180 வினாக்கள் - 180 நிமிடங்கள். ஒரு வினாவிற்கு 1 நிமிடம். நீண்ட நேரம் ஒரே வினாவை தீர்வு காணாமல் அடுத்த கேள்விக்கு செல்லவும்.

🔸 MAT பகுதி விடையளிக்கும் போது அனைத்து வகையிலும் யோசிக்க முயற்சிக்கவும்.

சிறந்த முறையில் தேர்வு எழுதி - வாழ்வின் முன்னேற்ற படியின் முதல் படியாக இந்த தேர்வின் அனுபவத்தை ஏற்று பயணிக்க வாழ்த்துகள்.


NMMS : தேர்வறையில்  மாணவர்களுக்கு சில Tips...

வினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை

🔸 ஆங்கில ALPHABET சார்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெறுவதால்

ABCDE... எழுதி 1234...

ZXYWV ... எழுதி 1234...

🔸 8 திசைகள் எழுத வேண்டும்

🔸 வர்க்க எண் 20 வரை

🔸கன எண் 10 வரை

🔸பகா எண்கள் 30 வரை

நினைவில் கொள்க :

🔸 காலம் கணக்குகள் மட்டு

🔸BODMAS

🔸 இரு எண் கூடுதல் மூன்றாவது எண்

🔹 மூன்று எண் கூடுதல் நான்காவது எண்

🔸 முதல் எண் - மூன்றாவது எண்

இரண்டாம் எண் - நான்காம் எண் தொடர்பு

🔹 வரிசை கணக்குகளில் இடது , வலது

🔸 கடிகார திசை - கடிகார எதிர் திசை

🔸 வர்க்கம் + 1 / வர்க்கம் - 1

🔹 கனம் + 1 / கனம் - 1

🔸 இரு எண் பெருக்கல் மூன்றாவது எண்

🔹 எண்களின் மடங்கு எ. கா. x 3 , x 4

🔸 எண்களின் அடுக்கு

எ. கா. 2 x 2 , 2 x 2 x 2 , ...

🔹பகா எண்ணின் கூடுதல்

🔸 எண்கள் / எழுத்துகளின் கண்ணாடி பிம்பங்கள்

கவனம் தேவை

🔹 SAT கூற்று காரணம் கேள்விகள்

🔸 பொருத்துக விடைகள் எ. கா

i-a, ii -C , iii - d , iv_ b

🔹 தவறான கூற்று எது ? கேள்வி சரியாக கவனிக்காமல் சரியான 3ல் ஒன்றை டிக் செய்வது

🔸 இயன்றவரை சிந்தித்து விடை தரவும்

🔹 இறுதி 10 நிமிடத்தில் விடுப் பட்ட அனைத்து வினாக்களையும் shade செய்யவும்.

🔸 Minus மதிப்பெண் இல்லை. எனவே அனைத்து கேள்வியும் விடை தருவது அவசியம்.

🔹 ஒவ்வொரு மதிப்பெண்ணும் அவசியம்.

எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு விதையாக இத்தேர்வு அமையட்டும்.

அன்பும் வாழ்த்துகளும்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post