NMMS Hallticket 2022 Download Link (www.dge.tn.gov.in)
கல்வி உதவி தொகைக்கான என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, இன்று முதல் பதிவிறக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
NMMS HALL TICKET 2022
எட்டாம் வகுப்பு மாணவர்கள், உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை பெற, என்.எம்.எம்.எஸ்., என்ற தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தேர்வு வரும் 5ம் தேதி நடக்கிறது.தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள், www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வு துறை இணையதளத்தில் இன்று வெளியிடப்படும்.
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், இந்த இணையதளத்தில், தங்கள் பள்ளிகளின் பயனாளர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.
SATHISH KUMAR
ReplyDeletePost a Comment