பணி நிரந்தரம் வேண்டி பகுதி நேர ஆசிரியரின் கண்ணீரை வரவழைக்கும் கண்ணீர் வண்ண ஓவியம்..!
நீரை வண்ணங்களில் கலந்து வரையும் ஓவியம் பார்த்திருப்போம். ஆனால் மாற்றாக நெகிழ்ச்சியாக...
கண்ணீரை வண்ணங்களில் கலந்து முதல்வர், அமைச்சர், உதயநிதி ஆகியோர் படங்களை வரைந்த பகுதி நேர ஓவிய ஆசிரியர்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சு.செல்வம் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி தன்னுடைய கண்களிலிருந்து வரும் கண்ணீரை வண்ணங்களில் கலந்து முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உருவங்களை கண்ணீர் வண்ண ஓவியமாக வரைந்துள்ளார்.
இதைப்பற்றி ஓவிய ஆசிரியர் செல்வம் கூறுகையில் :- பத்தாண்டு காலமாக பகுதிநேர ஆசிரியர்களாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து கொண்டு வருகிறோம். சமுதாயத்தில் குடும்பத்தில் மதிப்பு இல்லாமல், வாழ்வாதாரம் இல்லாமல், வேறு பணிக்கு செல்ல முடியவில்லை இதனால் கடன் வாங்கி வாழ்க்கை நடக்கிறது. மன உளைச்சல் ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் நினைக்கும் போது என் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது. பிறகுதான் யோசித்தேன் கண்ணீரைக் கொண்டு படம் வரைந்து பணி நிரந்தர கோரிக்கை வைக்கலாம் என்று. தண்ணீரை வண்ணங்களில் கலந்து வரையும் ஓவியத்தின் பெயர் - நீர்வண்ண ஓவியம் என்று அழைப்பார்கள். அவைகளுக்கு மாற்றாக என்னுடைய கண்களில் இருந்து வரும் கண்ணீரையே வண்ணங்களில் கலந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் படங்களை கண்ணீர் வண்ண ஓவியமாக பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டி வரைந்துள்ளேன். பொதுமக்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் ஓவியம் வரைந்த செல்வம் ஓவிய ஆசிரியருக்கு அவர்களுக்கு பாராட்டுக்களும் ஆறுதலும் தெரிவித்துனார்கள்.
சு.செல்வம்
பகுதிநேர ஓவிய ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி .
சிவனார்தாங்கல்.
திருக்கோவிலூர் ஒன்றியம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
செல் - 8940292827
Post a Comment