Teachers Transfer 2022 - மலை சுழற்சி தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தொடக்கக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் பணிநிரவல் / பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின்படி பார்வை பார்வை 3 ல் காணும் அட்டவணைப்படி 27.012022 முதல் 18 : 022022 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அக்கலந்தாய்வின் போது மலைப்பாங்கான இடங்களின் உள்ள பள்ளிகளுக்கு அரசாணை நிலை எண் , 404 கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நாள் .25.05.1995 ன்படி மலைச்சுழற்சி முறை ( Hill Rotation ) மாறுதல்களை அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி அந்தந்த பதவிகளுக்கு பட்டியலில் குறிப்பிட்டுள்ள அந்தந்த நாட்களில் முன்கூட்டியே வழங்கிடவும் அதன் பின்னர் ஏற்படக்கூடிய காலிப்பணியிடங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பின்னர் உரிய இணையவழி கலந்தாய்வினை நடத்திடவும் கீழ்க்காணும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் , இப்பொருள் சார்ந்து தனிக்கவனம் கொண்டு எவ்வித தவறும் நிகழாவண்ணம் கலந்தாய்வினை நடத்திட கீழ்க்காணும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Post a Comment