தமிழகத்தில் கடந்த சுமார் 19 மாதங்களாக பரவி வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. இது குறித்து தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் விரைவில் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார்
TET தேர்வு விரைவில்:
தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) மூலம் தகுதியான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதாவது மத்திய அரசு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விதமாக TET தேர்வை அறிமுகம் செய்தது. அந்த வகையில் TET மற்றும் CTET தேர்வு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகத்தில் TET தேர்வானது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TNTRB) நடத்தப்பட்டு வருகிறது. மத்திய ஆசிரியர் தகுதி தேர்வானது (CTET) மத்திய அரசு சார்பில் CBSE நடத்தி வருகிறது.
TET தேர்வில் மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும், அதில் பொதுப்பிரிவினருக்கு 90 மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 82 மதிப்பெண்களும் எடுத்தால் தேர்ச்சி என்று அளிக்கப்படுகிறது. இந்த தேர்ச்சியானது வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது. மேலும் இந்த தேர்வுகள் NCTE விதிமுறைப்படி ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் TET தேர்வு 2013ம் ஆண்டு தொடங்கி 2014, 2017, 2019 என 4 தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டுகால அட்டவணைப்படி கடந்த 2020 ஜூலை மாதம் TET தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக TET தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் TET தேர்வு எப்போது வரும் என்று இடைநிலை ஆசிரியர் படித்துள்ள மற்றும் பட்டதாரி ஆசிரியர் படித்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் TET தேர்வு குறித்து தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் TET தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியானதும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றோருக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment