DSE - ஆய்வக உதவியாளர் இளநிலை உதவியாளராக பதவி உயர்வு - பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறை
அரசாணை நிலை எண் .63 நிதித் ( ஊதியப்பிரிவு ) துறை நாள் 26.02.2011 க்கு பிறகு ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து பணி மாறுதல் மூலம் இளநிலை உதவியாளராக நியமனம் பெற்ற பணியாளர்களின் விவரம் , உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்ற பணியாளர்களின் விவரம் , ஆய்வக உதவியாளராகப் பணிபுரிந்து பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் விவரம் , ஆய்வக உதவியாளராகப் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் விவரம் , தற்போது பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 22.11.2021 பிற்பகல் 03.00 மணிக்குள் அ 4 பிரிவு மின்னஞ்சல் மூலமும் மற்றும் இணை இயக்குநரின் ( பணியாளர் தொகுதி ) மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு , முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேற்காணும் விவரங்களைக் கல்வி மாவட்டம் வாரியாகப் பெற்று முதன்மைக் கல்வி அலுவலர் வருவாய் மாவட்ட அளவில்தொகுத்து சரியான விவரங்களை மட்டுமே அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளலாகிறது . மேற்காண் விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களே முழுப் பொறுப்பேற்கக்கூடும் என்பதையும் தெரிவிக்கலாகிறது.
DSE - Lab Aas Promotion Proceedings - Download here # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment