எதிர் வருகின்ற 2021. நவம்பர் 14 ம் தினத்தன்று ( 14.11.2021 ) ஒவ்வொரு வருடமும் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு அவர்களின் பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும். எனவும் , ஆனால் தற்போது கொரானா தொற்று காலத்தில் இருந்து மீண்டு வந்திருப்பதால் ஒவ்வொரு துறையும் அவரவர்களுக்கென குழந்தைகள் தினவிழா கொண்டாடுவதால் , அவரவர்களுக்கென வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு . நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவும் 2021 , நவம்பர் முதல் தேதி முதல் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்த அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் அதிகபட்சம் 20 மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு , பள்ளிகள் அனைத்தும் தொடக்கக் கல்விதுறையால் அனுப்பப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படியும் அனைத்து பள்ளிகளும் இயங்க அனுமதிக்கப்பட்டன. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் பொருட்டும் , மீண்டும் எழுச்சிபெற்று ஊக்கத்துடன் தனது கல்வியை தொடங்குவதற்கும் . விளையாட்டு போன்ற செயல்பாடுகளை மீண்டும் செயல்படுத்தவும் , அந்தந்தத் துறையினரால் வகுத்து அளிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள விதிகளின்படி நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி , அதன் மூலம் குழந்தைகளுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என ஆணையம் கருதுவதால் வருகின்ற நவம்பர் 14 - ம் தினத்தை ஒரு சிறப்பு நேர்வாக கொண்டு குழந்தைகளிடையே ஒரு சிறந்த எழுச்சியை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் . எனவே மேற்படி நிகழ்ச்சிகளை நடத்தி , நவம்பர் மாத இறுதிக்குள் அறிக்கை அனுப்பிவைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே , மேற்படி நிகழ்ச்சிகளை நடத்தி அறிக்கையினை நவம்பர் 25 -ம் தேதிக்குள் இரு நகல்களில் அனுப்பிவைக்க அனைத்து மாவட்ட முதன்மைக் அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment