பலநூறு மணிநேரப் பணியில் தொடக்கப் பள்ளி முதல் பருவ பாடப்புத்தகங்களை திரைப்படமாக( வீடியோவாக )மாற்றும் பணியை முடித்துள்ளேன்.
திரைப்படங்கள் போல் ஒவ்வொரு வகுப்புகளுக்குமான வீடியோவும் 2 லிருந்து 2:30 மணிநேரம் வரை ஓடும்படி அமைத்துள்ளேன். பாடத்தின் முதல் வரி தொடங்கி கடைசி வரி வரை ஆடியோ மற்றும் வீடியோவாக மாற்றியுள்ளதால் மாணவர்கள் பாடங்களை திரைப்படம் பார்ப்பதுபோல் ( Visual learning ) பார்த்துப் புரிந்துகொள்வர்.
வீடியோவாக மாற்றப்பட்ட பாடங்கள்.....
முதல் வகுப்பு - தமிழ், ஆங்கிலம், சூழ்நிலையியல்.
இரண்டாம் வகுப்பு - சூழ்நிலையியல்.
மூன்றாம் வகுப்பு - அறிவியல், சமூக அறிவியல்.
நான்காம் வகுப்பு - அறிவியல், சமூக அறிவியல்.
ஐந்தாம் வகுப்பு - அறிவியல், சமூக அறிவியல்.
ஊரடங்கு தொடங்கிய 2020, மார்ச் மாதம் முதலே பாடங்களை வீடியோவாக மாற்றும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டேன். இந்த ஒரு வருடத்தில் தொடக்கப்பள்ளியின் மூன்று பருவங்களுக்குமான பாடப்புத்தகங்களை வீடியோவாக மாற்றத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் தினமும் 12 மணிநேரத்திற்கும் மேல் பணி செய்ததால் ஏற்பட்ட கண் பிரச்சனையின் காரணமாக முதல் பருவம் மட்டுமே முடிக்க முடிந்தது. எனினும் அடுத்தடுத்த பருவங்களுக்கான வீடியோவையும் முடித்துவிடுவேன்.
தற்போது ஐந்தாம் வகுப்பு பாடங்களை ( மூன்று பருவத்திற்கும் ) www.guruedits.blogspot.com என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன். இவ்வருடம் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டவுடன் மற்ற வகுப்புகளுக்கான வீடியோவையும் பதிவேற்றம் செய்யவுள்ளேன்.
ஒவ்வொரு பாடத்தையும் இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரித்து வழங்கியுள்ளேன். ஆசிரியர்கள் அதன் linkஐ மாணவர்களுக்குப் பகிர்ந்து பார்க்கச் செய்யலாம்.
எந்த ஒரு தொழில்நுட்பமும் ஆசிரியரின் நேரடிக் கற்பித்தலுக்கு ஈடாகாது. அதனால் இந்த ஊரங்கு நாட்களில் ஆசிரியர்கள் ஒரு facilitatorஆக இருந்து இவ்வீடியோக்களை அவர்களுடைய பள்ளி Whatsapp குழுக்களில் பகிர்வதன் மூலம் மாணவர்கள் பாடக்கருத்துகளை புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.
இப்படிக்கு...
*இரா.குருமூர்த்தி*
*இடைநிலை ஆசிரியர்,*
*தொட்டியம் ஒன்றியம்,*
*திருச்சி மாவட்டம்*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment