*தேர்தல் பணியில் ஈடுபடப் போகும் அனைவரின் கவனத்திற்கு...:*
தேர்தல் பணிக்காக வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
வாக்குச்சாவடியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள CCTV கேமரா இப்போதிருந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிற வாய்ப்பு உண்டு .எனவே தேர்தலுக்கு முந்தைய நாள் தங்குதல், தூங்குதல் மறுநாள் தயாராகுதல் ஆகியவற்றில் பெண் அலுவலர்கள் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
அனைவரும் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் சென்று எந்த விதமான பதற்றமும் இன்றி தங்களுக்கு வழங்கப்பட்ட பணியினை சிறப்பாக செய்திடவும்.
தேவையான அடிப்படை வசதிகளை நாமே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்..
வெயில் காலம் என்பதால் தண்ணீர் அதிகமாக பருகவும். உணவிற்கு உரிய ஏற்பாடுகளை இன்றே செய்திடவும்...
சகோதரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்...
அலைபேசியில் எப்போதும் சார்ஜ் முழுமையாக உள்ளதை உறுதி செய்து கொள்ளவும். இடத்தை அடைந்ததும் உறவுகளுக்கு தெரியபடுத்தவும்..
அதிக ஆபரணங்கள் அணியவேண்டாம். தேவையான அளவு பணம் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.....
இன்றியமையாத பொருட்கள், மாத்திரை மருந்துகள் மற்றும் தேவையான அனைத்து பொருட்களையும் தவறாமல் எடுத்து செல்லவும்....
அருகில் உள்ள பேருந்து நிலையம், ரயில் நிறுத்தம் போன்றவற்றை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம். முக்கியமாக அரசியல் சார்ந்து அலைபேசி உரையாடல் வேண்டவே வேண்டாம்...
நமக்கு கொடுக்கப்பட்ட பணியினை அனைவருடனும் சேர்ந்து ஒற்றுமையாக செய்யவும்.
தூங்கும்போதும் அடிப்படை செயல்களின் போதும் கூடுதல் கவனம் தேவை...
ஆண்டு கணக்கில் மாணவர்கள் பள்ளிக்கு வராததால் பள்ளியில் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்...
ஏதாவது பிரச்னை என்றால் உடனே உரியவர்களை தொடர்பு கொள்ளுங்கள்...
உடன் பணிபுரிய வரும் நம் பெண் சொந்தங்களுக்கு நாமே அரணாக இருப்போம்..
வழிப்போடு ஜனநாயக கடமையை நடுநிலை தவறாது சிறப்பாக செய்திட மீண்டுமொரு முறை வாழ்த்துக்கள்...
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment