Title of the document
இன்றைய செய்திகள்
14.04.2021(புதன்கிழமை)
🌹அழ வைத்து பார்க்கின்றவர்களுக்கு தெரிவதில்லை,கண்ணீரோடு அவர்கள் மேல் உள்ள அன்பும் கரைந்து போகும் என்று.!
🌹🌹உலகிலுள்ள எல்லா வலிகளை விடவும் கொடியது.
பகிர்ந்துகொள்ள முடியாத வலிகளை மனதுக்குள்ளேயே மறைத்திருப்பது தான்.!!
🌹🌹🌹அதிகம் கோபப்படுகிறவர்களிடம் நெருங்கி பழகிப் பாருங்கள்.
நேர்மையும்,அன்பும் அவர்களிடம் நிறைந்தே இருக்கும்.!!!
🌹🌹🌹🌹அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎀🎀Covid -19 தடுப்பு முறைகளை பள்ளிகளில் ஆய்வு செய்ய இயக்குநர்கள் & இணை இயக்குநர்கள் தலைமையில் குழு அமைத்து - பள்ளி கல்வித் துறை செயலாளர் உத்தரவு
🎀🎀அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, உயர்கல்வி துறை முதன்மைச் செயலர் செல்வி அபூர்வா-வை, ஒருங்கிணைப்பாளராக கொண்ட குழு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
🎀🎀அரசுப்பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை பணியை தொடங்க அறிவுறுத்தல்- பள்ளிக்கல்விதுறை அதிகாரிகள் தகவல்
🎀🎀கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராக 02.02.2016 முதல் 31.12.2019 வரை பணிநியமனம் செய்யப்பட்டவர்களை பணிவரன்முறை செய்தல் சார்பாக பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🎀🎀உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் போன்ற பதவிகளுக்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி, எழுத்துத் தேர்வு நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது
🎀🎀RTE 25 சதவீத ஒதுக்கீட்டில் மே மாதம் சோ்க்கை நடத்தப்படும் என கல்வித்துறை தகவல்.
🎀🎀சம்பளமின்றி தவிக்கும் தனியார் பள்ளி & கல்லூரி ஆசிரியர்கள் - வாழ்வாதாரம் இழந்த 10 லட்சம் குடும்பங்கள்.
🎀🎀பிளஸ் 2 மாணவர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்ணை ஏப்ரல் 22-க்குள் பதிவேற்ற உத்தரவு.
🎀🎀20 புதிய ஆன்லைன் படிப்புகளை அறிமுகம் செய்த சென்னை பல்கலைக்கழகம்.
🎀🎀பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 2வது திருப்புதல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
🎀🎀மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் எஸ்பிஐ வங்கி 5 ஆண்டுகளில் ரூ.300 கோடியை வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் இந்த விவரம் வெளிவந்துள்ளது. 2018-19-ம் ஆண்டில் 72 கோடி ரூபாயும், 2019-20ஆம் ஆண்டில் 158 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறது. அதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கி 3.9 கோடி வாடிக்கையாளர்களிடமிருந்து 9.9 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
🎀🎀ஊரடங்கு வந்துடும் அச்சம் காரணமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து ஏராளமான புலம் பெயர் தொழிலார்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்
🎀🎀சென்னை - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு  புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயரை நீக்கியிருக்கும் பழனிசாமியின் காபந்து அரசுக்கு கடும் கண்டனம்.கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
🎀🎀எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு உள்ளது காபந்து அரசு..
மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்
🎀🎀மே மாதம் ஆட்சி அமைக்கும் திமுக, பெரியாரின் பெயரை நிலைநாட்டும்’
வைகோ
🎀🎀பெரியார் ஈ.வே.ரா. சாலையின் பெயரை ஓசையின்றி மாற்றிய தமிழக அரசு!: 
யாரை திருப்திப்படுத்துவதற்காக இந்த விஷமத்தனம்.?
கி.வீரமணி கேள்வி.
🎀🎀கேரளாவைப்போல் தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் ”இ பாஸ்” பெற்றுள்ளார்களா என, குமுளி சோதனைச்சாவடியில் தமிழக போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர்
 eregister.tnega.org என்ற இணைய தளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்து ”இ பாஸ்” பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
🎀🎀தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுஷில் சந்திரா நேற்று                  பொறுப்பேற்றுக்கொண்டார்.
🎀🎀அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்வதோடு, ஒருசார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும்.
மு.க. ஸ்டாலின்.
🎀🎀12-ம் வகுப்பு பொதுத்தேர்வைக் கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.
பாடநூல் கழக தலைவர் ஜெயந்தி, டி.ஆர்.பி. தலைவர் நிர்மல்ராஜ், சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் லதா, உதவி திட்ட இயக்குநர் அமிர்தஜோதி ஆகியோர் நியமனம்.
🎀🎀கோவை காந்திபுரத்தில்  ஹோட்டலில் சாப்பிட்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் எஸ்.ஐ முத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டது விமர்சிக்கப்பட்ட நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் நடவடிக்கை.
🎀🎀கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில ஆளுநர்களுடன் குடியரசு துணைத் தலைவர், பிரதமர் இன்று ஆலோசனை.
🎀🎀அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவு.
🎀🎀கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியமர்த்த சுகாதாரத்துறை திட்டம்.
🎀🎀இந்தியாவில் மேலும் பிற வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கும் விரைவில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக தகவல்.
🎀🎀சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும். பத்திரப்பதிவிற்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
-பதிவுத்துறை தலைவருக்கு முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம்.
🎀🎀இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று மதியம் 12 மணி முதல் கொல்கத்தாவின் காந்தி மூர்த்தியில் தர்ணா போராட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டார்.
🎀🎀கோவில்களில் நடைபெறும் திருமணத்திற்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
கோவில் மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 50 பேருக்கு மேல் அனுமதி இல்லை
– இந்து சமய அறநிலையத்துறை
🎀🎀மத்திய அரசால் மாநில அரசிற்கு வழங்கப்படும் மண்ணென்ணை அளவு 20%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
🎀🎀கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானா, தில்லி உள்ளிட்ட இதர மாநிலங்களிலிருந்து ஒசூர் எல்லையான அத்திபள்ளி வழியாக தமிழகத்திற்குள் வருகை தருவோர் மூலம் நோய் பரவல் அதிகரித்துவிடக் கூடும் என்பதால், வாகனங்கள் இ பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
🎀🎀மதுரை சித்திரை திருவிழா - குறிப்பிட்ட நேரங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி.
🎀🎀பெரியார் ஈ.வே.ரா சாலையை Grand Western Trunk Road என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து கருப்புச் சாயம் பூசி புதிய பெயரை அழித்த திராவிடர் விடுதலைக்கழகத்தினர்.
🎀🎀கொரோனா தடுப்பூசியை வீணடிக்காத மாநிலமாக கேரளா திகழ்கிறது
- மத்திய சுகாதார செயலாளர்
🎀🎀ஐசிசி மார்ச் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக புவனேஸ்வர் குமார் தேர்வு.
🎀🎀வேளச்சேரி சட்டமன்ற தொகுதி 92 வது வாக்குச்சாவடியில் வரும் 17 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு. 
வாக்குப்பதிவு நாளன்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது சர்ச்சையானது.
🎀🎀இன்று 14.04.2021 முதல் ரம்ஜான் நோன்பு தொடக்கம்.
🎀🎀ஊரடங்கு உத்தரவு தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும் உயிரிழப்புகளை குறைக்கவும் உதவியது; தடுப்பு மருந்துகள் அல்ல.
- இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் கருத்து.
🎀🎀குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய பட்டியலினத்தின் ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைப்பதற்கான சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
🎀🎀சென்னையில் இதுவரை இல்லாத உச்சமாக நேற்று ஒரே நாளில் 2,482 பேருக்கு கொரோனா.
30.07.2019ல் 2,393 பேருக்கு தொற்று பரவியதே உச்சமாக இருந்தது.
முதல் அலையில் 3 மாதங்களில் உச்சம் தொட்ட பரவல், இப்போது 30 நாட்களில் உச்சத்தை தொட்டுள்ளது.
முதல் அலையை விட 3 மடங்கு வேகமாக பரவுகிறது தொற்று.
🎀🎀அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு.
அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 6 பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டதால் முடிவு.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post