*கோவிட்19 தடுப்பூசி!*
*போட்டுக்கொண்டோருக்கும். . .!*
*போட்டுக்கொள்வோருக்கும். . .!*
✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
https://m.facebook.com/story.php?story_fbid=3825483360846814&id=100001555646626
வாக்காளப் பெருமக்களே! தேர்தல் பணியாற்றவுள்ள அரசு ஊழியர்களே! ஆசிரியர்களே! வணக்கம்.
கடந்த சில தினங்களாக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாமா? வேண்டாமா? போட்டுக் கொள்வது கட்டாயமா? இல்லையா? என்பன போன்ற கேள்விகள் எழுந்து கொண்டேயிருக்க. . . 'நான் தடுப்பூசி போட்டுக்கிட்டேன்!' என்ற புகைப்படப் பதிவுகளையும் பலர் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
சரி. _தடுப்பூசி போட்டா 100% பாதுகாப்பா? யார் போட்டுக்கலாம்? யார் போட்டுக்கக் கூடாது? தடுப்பூசி போட்டுக்கிட்டாலும் எப்படி இருக்கனும்?_ பார்க்கலாம் வாங்க.
இந்திய ஒன்றியத்தில் கோவேக்சின் & கோவிசீல்டு என்ற இரு கோவிட்-19 நோய்த் தடுப்பு ஊசிகள் புழக்கத்தில் உள்ளன.
இவற்றுள் தற்போது வரை வெளிவந்துள்ள இடைக்கால ஆய்வு முடிவுகளின் படி, கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்கும் திறன் என்பது,
கோவேக்சினிற்கு 80.6%
கோவிஷீல்டிற்கு 74%
என்ற நிலையில் உள்ளது.
இவ்விரு தடுப்பூசிகளையும் பொறுத்தவரை குறிப்பிட்ட கால இடைவெளியில் இருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதல் முறை தடுப்பூசி போட்ட பிறகு, 28 நாள்கள் கழித்து இரண்டாவது முறையாக தடுப்பூசி போடப்படுகிறது.
இரண்டாவது முறை தடுப்பூசி போடப்பட்ட பின், 14 நாள்கள் கழித்துதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
உதாரணமாக, மார்ச் 1 & மார்ச் 29 என இருமுறை தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபரின் உடலில் கொரோனா நோய்த் தடுப்பாற்றல் என்பது ஏப்ரல் 12-ம் தேதிக்குப் பின்னர் தான் உருவாகும்.
அதாவது, மார்ச் 1-ல் தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் ஏப்ரல் 12 வரை கொரோனா பாதிப்பிற்கு உள்ளாக 100% வாய்ப்புகள் உண்டு.
எனவே முகக்கவசம், கை சுத்தம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மறந்தும் தவிர்த்துவிடக் கூடாது.
குத்துமதிப்பா சொல்லனும்னா. . . *ரெண்டு முற ஊசி குத்திக்கோனும்! மொதோ முற குத்திக்கிட்டதுல இருந்து 45 நாளு வரைக்கும் பாதுகாப்பாத்தேன் இருக்கோனும்.*
ஆக. . . .
தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள வாக்காளரோ. . . தேர்தல் பணியாளரோ. . . யாராயினும் ஏப்ரல் 6-ல் நடைபெறும் _வாக்குப் பதிவின் போதும் கொரோனா நோய்த் தடுப்பு நெறிமுறைகளை 100% கைப்பற்றியாகத்தான் வேண்டும்._
*அதேன் தடுப்பூசி போட்டுட்டோம்ளனு மிதப்பா இருந்தா. . . பெறவு பதபதப்பா இருக்றமாதி ஆயிடும்.*
சரி. 45 நாள்களுக்குப்பின்னும் பாதிக்கவே பாதிக்காதா என்றால். . .
இடைக்கால ஆய்வு முடிவின்படி, கோவிஷீல்டு தடுப்பூசி பெற்ற 8597 பேரில் 84 பேருக்கு மட்டுமே அறிகுறிகளுடன் கொரோனா ஏற்பட்டுள்ளது. . . . . என்றாலும், ஒருவர் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவு தீவிர கொரோனா நிலையை அடையவில்லை.
எனவே, கோவிஷீல்டு தடுப்பூசி
'தீவிர கொரோனா பாதிப்பு' மற்றும் கொரோனா மரணங்களை 100% தடுக்கும் என்று இதுவரை வந்த ஆய்வு முடிவுகளில் தெரிய வருகிறது.
ஆகையால் முகக்கவசம், கை சுத்தம், தனிமனித இடைவெளி இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவசியமே.
*யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கக் கூடாது?*
❌ 18 வயதுக்குக் கீழுள்ளோர்,
❌ கர்ப்பிணிகள்
❌ பாலுாட்டும் தாய்மார்கள்
❌ கடுமையான பிற தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்கள்
❌ சர்க்கரை / ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்
❌ கொரோனா சிகிச்சை பெறுபவர்கள்
❌ கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு 45 நாள்களுக்குள் உள்ளோர் (இக்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் இருக்கும்).
*யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கலாம்?*
✅ 18 வயதுக்கு மேற்பட்டோர்.
✅ 45 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களில் சர்க்கரை / ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டோரில் பாதிப்பு கட்டிற்குள் உள்ளோர்.
_தரவுகள் உதவி_
மரு. நிர்மலா, டீன், கோவை
மரு. ஃபரூக் அப்துல்லா, சிவகங்கை
_படம் : பிபிசி_
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment