Title of the document
Today Tamil News | Tamil News Headlines | Tamil Nadu Today Breaking News

இன்றைய செய்திகள்
9.02.2021(செவ்வாய்க்கிழமை)
🌹வாழ்க்கையில் விலைமதிக்க முடியாத அனுபவங்களையும் பாடங்களையும் நமக்கு கற்றுக் கொடுப்பது பள்ளிக்கூடங்களோ,கல்லூரிகளோ அல்ல.
பணமில்லா வாழ்க்கையும்,பசித்த வயிறும்,உடைந்த மனமும் தான்.! 
🌹🌹நல்லவர் கெட்டவர் 
என யாரையும் தீர்மானித்து விடாதீர்கள்.
சூழ்நிலை என்பது எவரையும் தலைகீழாய் புரட்டி போடும் வல்லமை
கொண்டது.!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⛑⛑நேற்று காலையில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று இரவு 10.15 மணி அளவில் சேப்பாக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இன்று காலை எழிலகத்தில் உண்ணாநிலை அறப்போராட்டம் தற்போது  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.⛑⛑மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – 2021 பெயர்ப்பட்டியல் தயாரித்தல் – கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
⛑⛑TNPSC- தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிகள் ,அரசாணைகள் & தேர்வாணைய நடைமுறை விதிகள்- போன்றவற்றை உள்ளடக்கிய விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் தற்போது 31.01.2021 அன்று முதல் திருத்தி அமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன வெளியீடு
⛑⛑NEET 2021 _ தேதி அறிவிப்பு எப்போது? மாணவர்கள் எதிர்பார்ப்பு
⛑⛑காலை உணவுடன் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இலவச மதிய உணவுத் திட்டம் தொடக்கம்
⛑⛑SPD - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி- மாணவியருக்கான தற்காப்புக் கலை ( Self Defence) பயிற்சி - மறு உத்தரவு வரும் வரை செலவினம் மேற்கொள்ள தடை விதித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு
⛑⛑2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்: அண்ணா பல்கலை கழகம்
⛑⛑9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
⛑⛑DGE - 2021-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணவர்கள் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் - கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக -  அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி வெளியீடு
⛑⛑பள்ளிக்கல்வி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பகுதிநேர பயிற்றுநர்களின் ஊதியம் ரூ 7,000 லிருந்து ரூ 10,000 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்பட்டது -திருத்தம் வெளியிடப்படுகிறது. 
⛑⛑சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் 82 பேருக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது 
⛑⛑அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கையை அரசு ரத்து செய்யாவிட்டால், முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதுடன், தேர்தலில் அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்போம் என்று தற்காலிக விரிவுரையாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது 
⛑⛑அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் செருப்புக்கு பதில்,ஷூ வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
⛑⛑அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் -  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  
⛑⛑கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு கடைசி வாய்ப்பில் யுபிஎஸ்சி தேர்வை எழுதாமல் தவறவிட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
⛑⛑ஆசிரியர்களுக்கு அந்தந்த தொகுதிகளில் தனிவாக்குச் சாவடி மையம் அமைக்க உத்தரவு                          
⛑⛑அரசாணை (நிலை) எண். 15 - நாள்: 08.02.2021 - கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி கடன் தள்ளுபடி - அரசாணை வெளியீடு
⛑⛑வேளாண் சட்டங்கள் திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி
⛑⛑தமிழகத்தில் இன்று முதல் காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
8.82 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும், 20ம் தேதிக்குள் சுகாதார பணியாளர்கள் முழுமையாக தடுப்பூசியினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் அச்சமின்றி முன்வர வேண்டுனெவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
⛑⛑எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தை அடுத்து  மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.                                              
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் ஓம்பிர்லா    மக்களவையை ஒத்திவைத்தார்.
⛑⛑4 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா செய்தியாளர் சந்திப்பு
👉ஜெ. நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.
👉அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா?  என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் 
👉மக்களை மிக விரைவில் சந்திப்பேன் 
👉கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது
👉பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டு வந்திருக்கிறது.
👉புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம்
👉தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை
👉அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன்.
⛑⛑அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித தொடர்பு இல்லாத நிலையில் அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது என கூறினார். கட்சியையும், கொடியையும் சசிகலா உரிமை கொண்டாட முடியாது எனவும் கூறினார்.
⛑⛑மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது பதிலளித்துப் பிரதமர் உரை:
போராட்ட ஜீவிகள் என்றொரு புதிய வகைக் கூட்டம் நாட்டில் உருவாகியிருப்பதாகவும், எந்த வகை போராட்டம் எங்கு நடந்தாலும் அவர்கள் சென்றுவிடுவதாகவும் விமர்சித்தார்.
போராட்டங்கள் இல்லாமல் வாழ முடியாத அத்தகைய சக்திகளை அடையாளம் கண்டு நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என மோடி கூறினார். 
திரிணமூல் எம்.பி. பேசும்போது ஆத்திரமூட்டல், பேச்சு சுதந்திரம் என்றெல்லாம் பேசியதாகவும், ஆனால் அவர் மேற்குவங்கத்தை நினைத்துக் கொண்டு இங்கு பேசுவதாகவும் கிண்டல் தொனியில் விமர்சித்தார்.
அதேமயம், நாகரிகமாகவும், நல்ல சொற்களையும் தேர்ந்தெடுத்துப் பேசும் குலாம் நபி ஆசாத்தை பார்த்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார்
⛑⛑அதிமுக அரசு எதையும் செய்யவில்லை; வெறுமனே பீற்றிக்கொள்கிறார்கள்.
விவசாயிகளுடன் மோதிய அரசு வென்றதாக வரலாறு இல்லை
விவசாயிகள் கைகளை மடக்கிவிட்டால், யாரும் பிழைக்க முடியாது.
ப.சிதம்பரம்
 ⛑⛑இன்னும் 3 மாதங்களில் தமிழகத்தில் திமுக தான் ஆளுங்கட்சி -
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
⛑⛑பெங்களூருவில் இருந்து ஒருவர் கிளம்பிவிட்டார்; 
இனி நடக்க வேண்டியது நடக்கும் 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
⛑⛑தமிழகத்தில் தற்போதைய அதிமுக அரசு டெண்டர் விடும் அரசாக உள்ளது- மு.க.ஸ்டாலின்
⛑⛑வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை என மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். 
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் என கூறினார். டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
⛑⛑தவறான தகவல்களை பரப்புவதாக 1,178 கணக்குகளின் பட்டியலை இந்திய அரசு டிவிட்டர் நிறுவனத்திடம் வழங்கியுள்ளது.
⛑⛑மீண்டும் தொடங்குகிறது 'அண்ணாத்த' சூட்டிங்
அண்ணாத்த படிப்பிடிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும். 
ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் அந்த படப்பிடிப்பு சுமார் ஒரு மாதம் நடைபெற உள்ளது.
⛑⛑அதிமுக உறுப்பினர் என்ற முறையில் சசிகலாவிற்கு கொடி பயன்படுத்த முழு உரிமை உள்ளது
- வழக்கறிஞர் ராஜா செந்தூர்பண்டியன்
⛑⛑சென்னை சேப்பாக்கத்தில் வரும் 13ம் தேதி இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
⛑⛑உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது
⛑⛑சுதாகரன், இளவரசியின் மேலும் சில சொத்துகளை பறிமுதல் செய்தது தமிழக அரசு
⛑⛑ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஜனவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான விருதுக்கு தேர்வானார் ரிஷப் பண்ட்.
⛑⛑ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மேகமலைப் பகுதிகளை இணைத்து நாட்டின் 51-வது புலிகள் காப்பகத்தினை அமைக்க மத்திய அரசு அனுமதி
⛑⛑சசிகலாவுக்கு கட்சி கொடியுடன் கார் வழங்கியவர், வரவேற்பு அளித்தவர்கள் என 7 பேரை அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்.
⛑⛑வரவேற்க வந்த தொண்டர்களை நீக்குகிறார்கள். இப்படியே நீக்கி கொண்டிருந்தால் சசிகலாவிற்கு எதிராக பேசும் அந்த பத்து பேர் மட்டுமே மீதம் இருக்க போகிறார்கள் - சி.ஆர்.சரஸ்வதி
⛑⛑சுயநலத்தின் மொத்த உருவமாக அமைச்சர் சி.வி சண்முகம் திகழ்கிறார்
தர்மம் தோற்றதாக வரலாறும் கிடையாது, துரோகம் ஜெயித்ததாக வரலாறும் கிடையாது. 
-அ.ம.மு.க  கொள்கை பரப்புச் செயலாளர்.
⛑⛑சசிகலாவிற்கு ஆதரவாக பேசிய ஓபிஎஸ் மகன்,கோகுல இந்திரா, ராஜேந்திரபாலஜியை கட்சியை விட்டு நீக்குவார்களா ?  
- சி.ஆர்.சரஸ்வதி
⛑⛑அரசு,பதவி,அதிகாரம்,காவல்துறை அனைத்தும் கைவசம் இருந்தும் சொந்த  கட்சி அலுவலகத்தை கூட மூடி வைக்கவேண்டிய அவலம்  எடப்பாடி பழனிசாமி தவிர வேறு எந்த முதல்வருக்கும் ஏற்பட்டிருக்காது. நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து பெற்ற பதவியின் வலிமை அவ்வளவுதான் - காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சனம்
 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                
 
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post