Title of the document
தமிழகத்தில் மே 3ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-2021ம் கல்வியாண்டில், மேல்நிலை இரண்டாமாண்டு (பன்னிரண்டாம் வகுப்பு) பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று முடிவடையும்.இதற்கான தேர்வுகால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும்.காலை 10 மணி முதல் காலை 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர்.காலை 10.10 மணி முதல் காலை 10.15 மணி வரை மாணவர்களின் விவரங்கள் பரிசோதிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேதி, பாடங்கள் அடங்கிய தேர்வு அட்டவணை :
மே 3ம் தேதி : தமிழ்
மே 5ம் தேதி : ஆங்கிலம்
மே 7ம் தேதி : கணினி அறிவியல்
மே 11ம் தேதி : இயற்பியல், எகனாமிக்ஸ்
மே 17ம் தேதி : கணிதம், விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ பையோலஜி,
மே 19ம் தேதி : உயிரியல், வரலாறு,பையோலஜி
மே 21ம் தேதி : வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Muthuraj
ReplyDeletePost a Comment