Title of the document
அரசு பள்ளிகளில் LED BULB, TUBE LIGHT !




மத்திய அரசின் நிதியில், சென்னை உட்பட, நான்கு மாவட்டங்களில் உள்ள, 127 அரசு பள்ளிகளில், குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சம் தரக்கூடிய, 'எல்.இ.டி., பல்பு, டியூப் லைட்' பொருத்த, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு, நாடு முழுதும், மின் சிக்கனத்தை வலியுறுத்தி வருகிறது. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள, மாநில அரசுகளுக்கு, பல்வேறு உதவிகள் செய்கிறது. அதன்படி, தற்போது, தமிழக அரசின் பள்ளிகளில், எல்.இ.டி., பல்புகள், மின் விசிறிகள் பொருத்தப்பட உள்ளன.அந்த பணிகளை, மத்திய அரசின் நிதியுதவியில், மின் வாரியம் மேற்கொள்ள உள்ளது.

முதல் கட்டமாக, சென்னையில், 21; திருவள்ளூரில், 30; காஞ்சிபுரத்தில், 26; செங்கல்பட்டில், 50 அரசு பள்ளிகளில், 7 வாட்ஸ் திறனில், 1,901 எல்.இ.டி., பல்புகள்; 20 வாட்ஸ் திறனில், 10 ஆயிரத்து, 215 டியூப் லைட்கள்; 28 வாட்ஸ் திறனில், 2,834 மின் விசிறிகள் பொருத்தப்பட உள்ளன.

மேலும், தஞ்சை, சேலத்தில், தலா, இரண்டு; திருச்சியில், ஒன்று என, மொத்தம், ஐந்து அரசு மருத்துவமனைகளில், 1,644 எல்.இ.டி., பல்புகள்; 16 ஆயிரம் டியூப் லைட்கள்; 6,817 மின் விசிறிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.அதைத் தொடர்ந்து, மற்ற மாவட்ட பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில், குறைந்த மின்சாரத்தில் இயங்கும் மின் சாதனங்கள் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post