Title of the document

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வீடு கட்ட முன்பணம் கோரும் பொழுது இணைக்க வேண்டிய கருத்துருக்கள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 26.02.2018



அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 ன் படி அரசு அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் வீடு கட்ட அரசு கடன் ரூ .25.00 இலட்சம் முன்பணம் பெற அனுமதி கோரும் கருத்துருக்களை கவனமுடன் ஆய்வு செய்து அனுப்பி வைக்க அறிவுரை வழங்குதல் - சார்பு . 
 
அனைத்து மாவட்ட முதன்மைக் மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படும் கருத்துருக்கள் ,  தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 ன் படி, 
 

கீழ்க்காணும் இனங்களுக்கான கருத்துருக்கள் அனைத்து மாவட்ட முதன்மை மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படுகிறது . அதன் விவரம் பின்வருமாறு :

 
1. வீட்டு மனை வாங்கியதற்கு பின்னேற்பும் வாங்க அனுமதி பெறவும் . 
 2 வீட்டு மனை வாங்க முன் அனுமதி பெறவும் , 
3. வீடுகட்ட அனுமதி , 
4. அரசுக் கடன் தனியார் கடன் பெற அனுமதி 
5. கட்டிய வீட்டை விரிவு படுத்த அனுமதி,
6. கட்டிய வீட்டை விரிவு படுத்த கடன் பெற அனுமதி . 
7. கட்டிய வீட்டை வாங்க அனுமதி
 8 . தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடுவாங்க அனுமதி தனியரிடம் , 
9. உறவினரிடம் கடன்பெற்று வீட்டு மனை வாங்க அனுமதி வீடு கட்டவும் அனுமதி , 
10. தான செட்டில்மென்ட் மூலம் காலி வீட்டுமனை பெறவும் , அதில் வீடு கட்டவும் அனுமதி எனவே மேற்கண்டுள்ளவாறு பெறப்படும் கருத்துருக்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள படிவங்களில் கோரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முழுமையான வடிவில் சரிவர பூர்த்தி செய்யப்படமாலும் , அவற்றினை கவனமுடன் ஆய்வு செய்யாமலும் முதன்மைக் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர்களால் பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படுகின்றது .. அவ்வாறு பெறப்படும் கருத்துருக்களை இவ்வியக்கத்தில் ஒப்புநோக்கும் போது நிறைய குறைபாடுகளுடன் உள்ளமையினால் அவைகளை அனுப்பிய முதன்மைக் கல்வி அலுவலருக்கே திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது . இதனால் வீணான கால விரையமும் அரசுக்கு கூடுதலாக அஞ்சலக செலவிடுகளும் ஏற்படுகின்றது . எனவே , இவைகளை தவிர்க்கும் பொருட்டு மேற்கண்டுள்ள இனங்களுக்கு அனுமதி கோரும் போது அரசு விதிமுறைகள் மற்றும் நடைமுறைளைப் பின்பற்றி உரிய விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய ஆவணங்களைக் கொண்ட 31 கலம் உள்ள படிவத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் , மாவட்டக் கல்வி அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் மேலொப்பம் இட்டுயிருத்தல் வேண்டும் . மேலும் 11 கலம் கொண்ட படிவம் மற்றும் 7 கலம் கொண்ட படிவத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் மற்றும் இத்துடன் இணைத்துள்ள உண்மைத்தன்மைக்கான சான்றினையும் விடுபடாமல் முழுமையான வடிவில் பூர்த்தி செய்த அனுப்பி வைத்தல் வேண்டும் . 
 

மேலும் கீழ்க்கண்டுள்ள விவரங்களையும் ஒப்பு நோக்கிக் கூர்ந்தாய்வு செய்து அவற்றை இணைத்து அனுப்பி வைத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது .அதன் விவரம் வருமாறு  :

 
1. உரியவரின் கோரிக்கை மனு தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதம்
2.முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரைக் கடிதம் 
3. வீடு கட்ட கடன் அனுமதிக் கோரும் 3 கலம் கொண்ட விண்ணப்பம் , 11 கலம் கொண்ட விண்ணப்பம் மற்றும் 7 கலம் கொண்ட விண்ணப்பம்
 5. சொத்து விவரம் 
6. பத்திரத்தின் விவரம்- ( புகைப்பட நகல் )
 7. தாய் பத்திரத்தின் விவரம்- ( புகைப்பட நகல் ) ( Parent Document ) வில்லங்க சான்று ( கடந்த ஆறு மாதங்களுக்குள் பெறப்பட்டவை ) சட்டக் கருத்துரு ( Legal opinian ) ( கடந்த ஆறு மாதங்களுக்குள் பெறப்பட்டவை ) 
10. உரிமம் பெற்ற அரசுப் பொறியாளர் வீடு கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டு சான்று
11. பஞ்சாயத்து தலைவர் ஒப்பமிட்ட மனையின் வரைவு படம் ( கடந்த ஆறு மாதங்களுக்குள் பெறப்பட்டவை ) 
12. ஊதியச் சான்று ( விண்ணப்பிக்கும் நாளுக்கு முந்திய மாதத்திற்குரியது ) 
13. அரசுக்கடன் பெற்று திரும்ப செலுத்துவதற்கான கணக்கீட்டு தாள்
 14. பணிச் சான்று 
15. ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் இல்லை என்பதற்கான சான்று . 
16. உறுதிமொழி சான்று 
17 , அரசிடம் ஏதும் கடன் தொகை பெற்றது நிலுவை இல்லை என்ற சான்று ( கணவன் , மனைவி அரசுப்பணியில் உள்ளவர்கள் எனில் தனித்தனியே பெற்று இருக்க வேண்டும் ) 
18. காலி மனை / வீடு இல்லை என்பதற்கான சான்று ( கணவன் , மனைவி அரசுப்பணியில் உள்ளவர்கள் எனில் தனித்தனியே பெற்று இருக்க வேண்டும் ) 
19. ஆறு ஆண்டுகள் பணி முடிந்தமைச் சான்று 
20. பணிப்பதிவேட்டின் முதல் பக்க புகைப்பட நகல் ( அலுவலகத் தலைவரின் மேலொப்பத்துடன் ) 
21. உண்மைத் தன்மைக்கான சான்று ( படிவம் இணைக்கப்பட்டுள்ளது ) 
 
எனவே மேற்கண்டுள்ள விவரங்களை அனைத்து அரசு அரசு உதவி பெறும் உயர் மேல் நிலைப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைத்திடவும் , இதன் விவரத்தினை அலுவலக பலகையில் ஒட்டி வைத்திடவும் , இச்செயல்முறைகள் பெற்றமைக்கான ஒப்புதலை தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெற்று அலுவலக கோப்பில் வைத்துக் கொள்ளவும் , துறையின் அனுமதியினை பெற்றிட முழுமையான அளவில் பரிந்துரை செய்து அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post