திட்டமிட்டபடி 9, 11ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: அமைச்சா்
திட்டமிட்டபடி 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு திங்கள்கிழமை (பிப்ரவரி 8) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய அதிமுக அலுவலகத்தை அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், அந்தியூா் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜா கிருஷ்ணன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தனா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: ஏற்கெனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் செய்ய முடியாது. திட்டமிட்டபடி திங்கள்கிழமை (பிப்ரவரி 8) 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படும். மீதமுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றாா்.
இதையடுத்து சத்தியமங்கலத்தில் நடைபெற்ற தனியாா் திருமண மண்டபம் திறப்பு விழாவில் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனா்
Post a Comment