Title of the document

TN Reduced syllabus / 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்டு இருக்கும் பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா? ஆசிரியர்கள் கருத்து என்ன?


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவுறுத்தலின்படி நேரம் இருந்தால் கூடுதல் பாடங்களையும் நடத்த முடியுமா?, மாணவர்கள் அதனை எளிதில் கற்றுக்கொள்வார்களா? என்பது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

இந்த அளவுக்கு பாடங்கள் குறைப்பு என்பது ஏற்றுக்கொள்ள கூடியது தான். ஆனால் பொதுத்தேர்வு சற்று தாமதமாக தொடங்கினால் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிப்பது என்பது சாத்தியப்படும். இல்லையென்றால் குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது சிரமம்.

கடினமான பாடங்கள் எதையும் நீக்கவில்லை. எளிதாக மாணவர்கள் மதிப்பெண் எடுக்கக்கூடிய சில பாடங்களை நீக்கி இருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு. மாணவர்களுக்கு எது கஷ்டமோ? அதை குறைக்காமல், மற்றவற்றை குறைத்து இருக்கிறார்கள்.

குறுகிய நேரத்தில் பாடங்களை நடத்தி மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வது என்பது கடினம். ஓரளவுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அவற்றை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல.


இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 
தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் பாடத்திட்டங்களை ஓரளவு நடத்தி முடித்து விட்டார்கள்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post