Title of the document

Tamilnadu Schools Reopen on 19.01.2021 - CM Press News | பள்ளிகள் திறப்பு பற்றி முதலமைச்சர் அறிக்கை !


 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை - 12.1.2021 






கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக , மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது . மாண்புமிகு அம்மாவின் அரசு , இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி , முனைப்புடன் செயல்பட்டு வருகிறது . மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் , நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது . தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும் , பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது . 28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் , மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும் , மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் , மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும் ,
 

பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு முடிவு :

 
 பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் 2021 ஜனவரி 6 முதல் 8 வரை கருத்து கோரப்பட்டது . 
 

பள்ளிகள் திறக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை :

  1. இக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள் , பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை..
  2. வரும் 19.1.2021 ம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் ..
  3. பள்ளிகள் திறக்கப்படும்போது , ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும் , அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி ..
  4. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி..
  5. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக , வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . 
 
மாணாக்கர்களின் நலன் கருதி , அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும் , ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post