பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு Multi vitamin Tablet மற்றும் Zinc Tablet வழங்குதல் - Director Proceedings
பள்ளிகள் 19.1.2021 அன்று திறக்கவும் மற்றும் பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு Multivitamin tablet மற்றும் Zinc tablet சுகாதார துறையின் மூலம் பெற்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு 10 Multivitamin tablet மற்றும் 10 Zinc tablet மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். இம்மாத்திரைகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அதனை தொடர்ந்து பார்வை 2 ல் உள்ள கடிதத்தில் மாவட்ட வாரியாக அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Multivitamin tablet மற்றும் Zinc tablet வழங்க மாவட்ட வாரியாக விவரங்கள் இணைப்பில் அளிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு : தமிழ்நாடு மருத்துவ பணிகள்கழக மேலாண்மை இயக்குநரின் கடிதம். )
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment