Title of the document

Income Tax - ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்


ஆசிரியருக்கு ஒரு தகவல் தற்போது பயன்படுத்தி வரும் இன்கம்டாக்ஸ் சாப்ட்வேர் XL SOFTWARE பல வடிவங்களில் பல விதங்களிலும் பலரால் தற்போது வழங்கப்பட்டுள்ளது.


வழங்கப்பட்டுள்ள எக்ஸெல் சாப்ட்வேரில் (xl software)  படிவம் 16 (Form 16A) சில சாப்ட்வேர்களில் வழங்கப்பட்டுள்ளது இந்த சாப்ட்வேரை  பயன்படுத்த சில நிபந்தனையுடன் வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது ஏனெனில் படிவம்16  (form 16 A)இதிலிருந்து பிரதி எடுக்கப்பட்டு income tax returns ஆசிரியர்களால் வருகிற  ஜூன் மாதம் முதல் நிரப்பப்படும்

அப்படி நிறப்படுவதால் ஆசிரியருக்கு (இன்கம் டாக்ஸ் துறையில்) Income tax department இருந்து நோட்டீஸ் (Notice) தண்டத்தொகை additional payment விதிக்க வாய்ப்புள்ளது எனவே இந்த (XL software) சாப்ட்வேர்கள் வருகின்ற படிவம் 16 (Form 16) பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.



படிவம் 16சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் டிடிஎஸ் (TDS) செய்து அதன் மூலம் வருகின்ற உண்மையான படிவம் 16 சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு ஜூன் 30 முடிந்து வழங்க வேண்டும் அப்படி வழங்கப்படுகின்ற படிவம் 16 (form16) பயன்படுத்தி தாங்கள் income tax returns (ITR) பதிவு செய்யப்பட வேண்டும் அப்படி பதிவு செய்தால் மட்டுமே தங்களுக்கு இன்கம்டாக்ஸ் துறையால் வழங்கப்படுகின்ற நோட்டீஸ் ஆனது வராது என்று தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.



*உண்மையான படிவம் 16 க்கும் தற்போது வரை சாப்ட்வேரில் இருந்து எடுக்கப்படுகின்றன போலி படிவத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கீழ்கண்டவாறு பார்ப்போம்*


1.உண்மையான படிவம் அரசு துறை அடையாளம் சிங்கமுகம்  பயன்படுத்தப்படுகிறது

போலியானதில் இல்லை

2. டி டி எஸ் TDS சர்டிஃபிகேட் CERTIFICATE நம்பர்   உள்ளது
போலியானதில் இல்லை

3. டிடிஎஸ் TDS இல் தங்களால் செலுத்தப்பட்ட இன்கம்டேக்ஸ் தொகை அனுமதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

போலியானவைகளில் இல்லை

4. சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் ஆல் தங்களுக்கு வழங்கப்பட்ட வருட தொகை (total income )என்ன என்பது உண்மையான படிவம் 16ல் தெளிவாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும்


போலியானவைகளில் இல்லை

படிவம் 16 சம்பந்தப்பட்ட சம்பளம் பட்டுவாடா அதிகாரி வழங்கப்பட வேண்டும் காலஆண்டு வாரியாக பதிவு செய்து ஜூன் மாத இறுதியில் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

பள்ளிகளை பொறுத்தவரை யார் யார் சம்பள பட்டுவாடா அதிகாரி என்று பார்ப்போம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள்-
block level officer(BEO)

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்- HEADMASTERS

அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்-DISTRICT EDUCATION OFFICERS

பிற அரசு துறைஅலுவலகங்கள்-
DDOS (BILL SIGNING OFFICERS)

எனது போலியாக இருக்கக்கூடிய ஆப்ஷனை பயன்படுத்தி இன்கம்டாக்ஸ் ரிட்டன் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. உண்மையான படிவம் 16-ஐ பயன்படுத்தி இன்கம்டாக்ஸ் ரிட்டன் செய்யும்போது சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பது தெரியவருகிறது.

TEACHER INCOME TAX 9629803339

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post