G.O 134 - புதிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியீடு - All Districts
புதியதாக
தொடங்கப்படும் 25 தொடக்கப் பள்ளிகளுக்குத் தேவையான 25 தொடக்கப் பள்ளி
தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் 25 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ,
இயக்குநர் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்ட ஆசிரியரின்றி உபரியாக உள்ள
தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை
இணைப்பு -1 ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாற்றி வழங்கி ஆணையிடப்படுகிறது .
தரம் உயர்த்தப்படும் 10 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு , பள்ளி ஒன்றிற்கு ஒரு நடுநிலைப் பள்ளி தலைமையாசியர் ( நிலை 17 ரூ .36,700 -116200 ) மற்றும் 3 பட்டதாரி ஆசிரியர் ( நிலை 16 , ரூ .36400 -115700 ) வீதம் , 10 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தியும் , 30 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்ட உபரி பணியிடங்களிலிருந்து இணைப்பு - 2 ல் குறிப்பிட்டுள்ளபடி மாற்றி வழங்கி ஆணையிடப்படுகிறது .
இவ்வாறு மாற்றி வழங்கப்படும் 3 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு பாடவாரியான சுழற்சி முறையில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் முதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் , அடுத்தடுத்து வரும் 2021-22 மற்றும் 2022-23ஆம் கல்வியாண்டுகளில் தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் நிரப்பப்பட வேண்டும் . இதனைத் தொடர்ந்து புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குவதற்கும் மற்றும் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் குறித்தும் கீழ்கண்டுள்ளவாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment