கல்வி கடன் ரத்து செய்யப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;
மாணவர்கள் கல்வி கடன் ரத்து செய்வது குறித்து தேர்தல் வரும் போது தான் தெரியும். 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் செய்முறை தேர்வு நடைபெறும்.
தமிழகத்தை பொறுத்த வரை பள்ளிகளில் குறிப்பிட்ட வகுப்புகளை திறப்பது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை, பள்ளி கல்வித்துறை என இரு துறை கருத்துகளை அறிந்த பிறகு முதலமைச்சர் தான் முடிவெடுப்பார். பள்ளி திறப்பு குறித்து பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்கள் கருத்து இந்த வார இறுதிக்குள் கேட்கப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment