சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் - பள்ளிக்கல்வித் துறை
சளி, இருமல், தலைவலி போன்ற உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை, பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. சேலத்தில் நேற்று மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பள்ளி மூடப்பட்டுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் உடல் நலனில் முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவர்களின் பரிந்துரையின்படி பள்ளிகளுக்கு வந்தால் போதுமானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நோய்தொற்று காலம் என்பதால் பெற்றோர் மிக கவனமுடன் செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும் மாணவிக்கு எவ்வாறு கொரோனா தொற்று பரவியது என ஆய்வு மேற்கொண்டுள்ளதுடன், அவரது கிராமத்தில் சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் இதுபோன்று கொரோனா பரிசோதனைக்கு சென்ற மாணவ, மாணவிகள் யாரும் பள்ளிக்கு அனுமதிக்க கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment