Title of the document

 கணினி ஆசிரியர்களுக்கு 12 நாட்கள் பைதான் புரோகிராமிங் (Python Program) பயிற்சி 


மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பைதான் புரோகிராமிங் (Python Program) பயிற்றுவிக்கும் ஒரு முயற்சியாக அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் புதிதாக பணியேற்க உள்ள கணினி ஆசிரியர்களுக்கு இரண்டு வார காலத்திற்கு Faculty Development Workshop on 'Problem Solving Using Python' திட்டமிடப்பட்டுள்ளது 



மேலும், பைதான் புரோகிராமிங் (Python Program) மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களின் கீழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் உயர்படிப்பில் திறமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் திறன் மேம்படுத்திட மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் ஆசிரியர்கள் சுமார் 300 மணி நேரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிட ஊக்குவிக்கும் வகையில் Bootcamp நடத்தப்பட உள்ளது 



பைதான் புரோகிராமிங் (Python Program) ஒரு பொது நோக்கத்திற்கான மொழியாக இருப்பதால், இந்த Bootcamp மூலம் ஆசிரியர்கள், திறமையான மாணவர்களை உருவாக்க முடியும். மேலும், Web Developing . Data Analysis, Artificial Intelligence மற்றும் Machine Learing and Scientific Computing போன்ற வளர்ந்து வரும் துறைகளுடன் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க ஏதுவாக Bootcamp பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்களுக்கான Bootcamp 12 நாட்களுக்கு காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை Amphisoft நிறுவன வல்லுநர்களின் நேரடி விரிவுரைகள் மூலம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இணையதளம் மூலம் பயிற்சி வகுப்புகள் (Online Practice Session) நடைபெறும்.

பயிற்சி அமர்வின் போது ஆசிரியர்கள் சுமார் 10 Real Time பயிற்சிகளை செய்து முடித்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது நடைமுறையில் அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்த அவர்களுக்கு நேரடி வழிகாட்டல் வழங்கப்படும் நாட்கள் Bootcamp பயிற்சி முடிவதற்குள் ஆசிரியர்கள் 120 Real Time பயிற்சிகளைத் தோராயமாக முடித்திருப்பார்கள் பங்குபெற்ற அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் பயிற்சி முடித்தற்கான சான்றிதழ் வழங்கப்படும்

அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் புதிதாக பணியேற்க உள்ள கணினி ஆசிரியர்களை இந்த Covid-19 Lockdown காலகட்டத்தில் அவர்களை தகுதிவாய்ந்தவர்களாக மாற்றுவதற்கு இந்த Bootcamp பயிற்சி மிக முக்கியமானதாக இருக்கும் என அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது அனைத்து முதன்மைக் கல்வி

எனவே, அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் புதிதாக பணியேற்க உள்ள அனைத்து கணினி ஆசிரியர்களும்  இணைப்பை தெரிவு செய்வதன் மூலம் Bootcamp பயிற்சியில் பதிவு செய்து பங்கு பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது இப்பயிற்சி Amphisoft Technologies நிறுவனம் மூலம் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சியில் பங்கேற்க இன்று 03/01/2021, 04/01/2021 மற்றும் 05/01/2021 காலை 11 மணிக்குள் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே தங்கள் மாவட்டத்தில் பயிற்சி பெறாமல் உள்ள கணினி ஆசிரியர்களும் இப்பயிற்சியில் பங்கேற்க தலைமை ஆசிரியர் மூலம் உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

பயிற்சியானது 06/01/2021 முதல் 22/01/2021 வரை (பொங்கல் தினத்தை முன்னிட்டு 14/01/2021, 15/01/2021, 16/01/2021 மற்றும் 17/01/2021 மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து) நடைபெறும். ஒவ்வொரு நாளும் 2 மணி நேரம் இணையதள நேரடி பயிற்சி வகுப்புகளும் 6 மணி நேரம் செய்முறை வகுப்புகளும் நடைபெறும். கணினி ஆசிரியர்கள் அனைவரும் இப்பயிற்சியினை பயன்படுத்தி தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்பயிற்சி தொடர்பாக ஏதேனும் ஐயப்பாடுகள் இருப்பின், Dr. Bala Murugan, Chief Learning Officer, Amphisoft Technologies,  கைப்பேசி எண்.9442019192 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது, மேலும், திரு.பூ.ஆ.நரேஷ், இணை இயக்குநர் (தொழிற்கல்வி), 9443933373, கே. நந்தகுமார். கண்காணிப்பாளர்(கே பிரிவு), 9443995899 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post