Title of the document


TNPSC தேர்வுக்கு ஆதார் இணைக்க ஜன., 31 வரை அவகாசம்



டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுகளை எழுத விரும்புவோர், தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கான அவகாசம், ஜனவரி, 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.




தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுகளை எழுதுவோர், தங்களின் ஆதார் எண்ணை, ஒரு முறைப்பதிவு அல்லது நிரந்தரப்பதிவு கணக்குடன், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் இணைக்க வேண்டும் என, மார்ச், 24ல் அறிவிக்கப்பட்டது. இதற்கான கடைசி நாள், இந்த ஆண்டு, ஜூலையில் முடிந்தது.




கட்டாயம்




இதையடுத்து, வரும், 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதுவரை, 1.5 லட்சம் தேர்வர்களில், டிச., 23 முதல் நேற்று வரை, 70 ஆயிரம் பேர், தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்துஉள்ளனர். இன்னும் ஆதார் விபரங்களை இணைக்காத தேர்வர்களுக்காக, ஜனவரி, 31 வரை, அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.வரும் காலங்களில் தேர்வாணையத்துக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கவோ, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யவோ, ஒருமுறை பதிவு மற்றும் நிரந்தர பதிவுகளில், ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயம்.கூடுதல் விளக்கம் ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே, விண்ணப்பம் பதிவு செய்ய முடியும்.




எனவே, தேர்வர்கள் அனைவரும், ஆதார் எண்ணை உரிய காலத்தில் பதிவு செய்யவும்.இதுகுறித்து, கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால், 1800 425 1002 என்ற, தேர்வாணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், அலுவலக நேரங்களில், காலை, 10:00 முதல், மாலை, 5:45 மணி வரை, எல்லா வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம்.தேர்வாணையத்தின், contacttnpsc@gmail.com என்ற, இ- - மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.




'குரூப் - 1' தேர்வுக்கு பதிவில் விலக்குடி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:வரும், 3ம் தேதி நடக்க உள்ள, 'குரூப் - 1' தேர்வு, வரும், 9, 10ல் நடக்க உள்ள தொழில் மற்றும் வணிகத்துறை உதவி இயக்குனர் பணிக்கான தேர்வுக்கு, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயம்.


இதற்கு, பல தேர்வர்கள் தங்கள் சிரமங்களை தெரிவித்ததால், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்யும் நடைமுறை தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது. 'குரூப் - 1' மற்றும் உதவி இயக்குனர் தேர்வுக்கு, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை மட்டும் உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட் பெறலாம் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post