Title of the document

  ஆசிரியர் பிள்ளைகளுக்கு SCHOLARSHIP -  விண்ணப்பிக்ககடைசி தேதி  ஜனவரி 31


images%2528157%2529

'தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்படும்' என, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள், தொழிற்கல்வி படித்து கொண்டிருந்தால், அவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்படும். 


தமிழக தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து, இந்த தொகை வழங்கப்படும். ஆண்டு அடிப்படை ஊதியம் மட்டும், 7.20 லட்சம் ரூபாய்க்குள் இருப்பவர்களின் பிள்ளைகள், படிப்பு உதவி தொகை பெறலாம். இதற்கு, ஜன., 31க்குள், பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post