Title of the document
 குழந்தைகளை பள்ளியில் சேர்க்க‌ வீதியில் நின்று தண்டோரா போட்ட தலைமை ஆசிரியர்

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க‌ புதிய முயற்சியாக தலைமை ஆசிரியர் தண்டோரா மூலம் வீதி வீதியாக சென்று அறிவித்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

நாமக்கல் அருகே உள்ள ஈச்சம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன்(வயது51).


https://1.bp.blogspot.com/-NORa0QwwtTE/X9V3ms0Q6JI/AAAAAAAAbgc/xnNMG8lRjw4IOBA0_IHNLCOBic3CltfJwCLcBGAsYHQ/s0/202012121049258512_Tamil_News_Tamil-News-Head-Master-thandora-in-street-for-children_MEDVPF.gif

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், 15 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் படிக்காமல் இருந்தால் அவர்களை புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆசிரியர்கள் இது தொடர்பான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் புதிய முயற்சியாக தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தண்டோரா மூலம் வீதி வீதியாக சென்று அறிவித்து வருகிறார். இது அப்பகுதி பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post