தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வி வட்டாரம் தகவல் என்று நியூஸ்18, தினகரன் மற்றும் News 7 செய்திகளில் வெளியான செய்தி சமூக ஊடகங்களில் சுற்றி வருகின்றன..


ஊடகச் செய்தி : தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வி வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற வைக்கலாமா எனவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.10,11,12 ஆம் வகுப்புகளுக்கு தேர்தல் முடிந்த பின்பு பொதுத்தேர்வு நடத்ததப்படும். என்பது அந்த தகவல்.5 நாட்களுக்கு முன்பு கல்வித்துறை அமைச்சர் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியிலும் ஜனவரி 4 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்வரை காத்திருப்போம்..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment