Title of the document


தமிழகத்தில் உள்ள 27 உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து அரசாணை வெளியீடு.




தமிழகத்தில் உள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றுவதற்கான அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமாக 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. உறுப்பு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவுகள் பல்கலைக்கழக நிதியில் இருந்தே வழங்கப்படுகிறது. இதனால் பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்டது.

இந்நிலையில் கூடுதல் நிதிச்சுமையை தவிர்க்கும் வகையில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றும் அறிவிப்பை கடந்தாண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் 110-விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு முதற்கட்டமாக 14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கலை கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்தது.இந்நிலையில் மீதமுள்ள 27 உறுப்பு கல்லூரிகளையும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post