Title of the document
2013 TNTET சான்றிதழையும், ஆயுட்கால சான்றிதழாக வழங்க கோரிக்கை !





21/10/2020 நாளது தேதியில் ( NCTE ) தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழின் காலம் ஏழாண்டுகளிலிருந்து ஆயுட்காலமாக்கப்படும் எனவும் . ஏற்கனவே தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு சட்ட ஆலோசனை செய்து நடவடிக்கை | எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது . கடந்த ஆறாண்டுகளில் தமிழகத்தில் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட மேற்கொள்ளப்படவில்லை . டெட் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் எங்களது வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய போதிய வேலை வாய்ப்பும் உருவாக்கபடவில்லை குறித்து பலமுறைகள் சம்மந்தப்பட்ட துறையிடமும் தங்களிடமும் நேரிலும் கடிதத்தின் வாயிலாகவும் வலியுறுத்தினோம் . மேலும் பலகட்ட போராட்டங்களையும் மேற்கொண்டோம் . எந்த தீர்வும் எட்டப்படவில்லை . எனவே தாங்கள் தயவு கூர்ந்து தமிழகத்தில் | 2013 - ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி காத்திருக்கும் 80,000 ஆசிரியர்களின் நலன்கருதி எங்களது தகுதித்தேர்வு சான்றிதழையும் ஆயூட்காலமாக்கிட மத்திய அரசிடம் உரிய முறையில் வலியுறுத்தி வேண்டுகோள் விடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post