Title of the document

2000 கிலோ இலவச பாடப்புத்தகங்கள் பழைய இரும்புக் கடையில் விற்பனை செய்த பள்ளிக் கல்வித்துறை ஊழியர் கைது !



மயிலாடுதுறையில் பழைய இரும்புக் கடையில் இலவச பள்ளிப் பாடப் புத்தகங்களை விற்றது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறையில், முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புக் கடையில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான இலவச பள்ளிப் பாடப் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக புகார் எழுந்தது. இதனையடுத்து கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தப்போது 2019 - 20ஆம் ஆண்டுக்கான  3134 பாடப் புத்தகங்கள் இருந்தது தெரியவந்தது.

அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன்படி, பழைய இரும்புக் கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பழைய இரும்புக் கடையில் இலவச பள்ளிப் பாடப் புத்தகங்களை விற்றது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டார். அத்துடன் இரும்புக் கடை உரிமையாளர் பெருமாளையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post