Title of the document

10 ஆண்டுகள்  ஆகிறது, ஆசிரியர்கள் பணிநிரந்தரம் எப்போது?  


தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றி கொடுக்க,  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் அறிக்கையில் கூறியது :-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012 ஆம் ஆண்டு 16ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களை 5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமித்தார்.

உடற்கல்வி ஓவியம் கணினிஅறிவியல் தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி பாடங்களை மாணவர்களுக்கு நடத்தி வருகிறோம்.

சட்டசபையில் 2017 ஆம் ஆண்டே  பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வாக்குறுதி அளித்து இருந்தார்.

எனவே சட்டசபை அறிவிப்பை நடைமுறைப்படுத்தி, ரூபாய்  7700/- குறைந்த தொகுப்பூதியத்தோடு,  தற்போதுள்ள 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுகிறோம்.

இதில் மாற்றுத்திறனாளிகள், விதைவைகள் மற்றும் ஏழை விவசாய மக்கள் பெரும்பாலும் உள்ளார்கள்.

எனவே அனைவரின் குடும்பநலன் மற்றும் வாழ்வாதாரம் குறித்து கருணையுடன் மனிதநேயத்துடன் ஆளும் அதிமுக அரசு நல்லதொரு முடிவை அரசாணையாக வெளியிட வேண்டுகிறோம்.

வருகின்ற ஜனவரி மாதம் சட்டசபை கூட உள்ளது.

இடைக்கால பட்ஜெட் படிப்பார்கள்.

இடைக்கால பட்ஜெட்டிலாவது பகுதிநேர ஆசிரியர்களை  பணிநிரந்தரம் செய்ய கூடுதலாக நிதிஒதுக்கி காப்பாற்ற வேண்டுகிறோம் என்றார்.

முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சரை சுற்று பயணங்களில் நேரில் சந்தித்தும் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகிறோம்.

இதோடு மட்டும் இல்லாமல் பணிநிரந்தரம் செய்ய கேட்டு கருணை மனுக்களை தபால் மூலமாகவும்  அனுப்பி வருகிறோம்.

அரசின் கவனத்தை ஈர்க்க கருணை மனு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மனு நீதி நாளில் கொடுத்து  வருகிறோம்.

20 அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு 10 கல்விஆண்டுகளாக தொகுப்பூதியத்திலே  பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என குரல் கொடுத்துள்ளார்கள்.

எனவே இந்த வேலை கொடுத்த அதிமுகவும் ஆதரிக்க வேண்டுகிறோம்.

ஆளும் அதிமுகஅரசு இதை தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றி தரவேண்டும் என்றார்.

தொடர்புக்கு :-

சி. செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல் : 9487257203

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post