Title of the document

 MBBS 7.5% ஒதுக்கீடு - ஒரு வகுப்பை வேறு பள்ளியில் படித்தாலும் உரிமை கோர முடியாது - ஐகோர்ட் உத்தரவு.

 

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..



மருத் துவ கல்வியில் 7.5 சத வீத உள் இடஒதுக்கீடு 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் முழுமையாக படித்த மாணவர்களுக்குத்தான் , ஒரு வகுப்பை வேறு பள்ளியில் படித்தாலும் உரிமை கோர முடியாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது . 

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகே பள்ளிஓடவயல் கிராமத்தை சேர்ந்த அறிவழகன் , ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு : 


என் மகள் அறிவிகா . நாவக்கொல்லையிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5 ம் வகுப்பு வரை படித்தார் . அங்கு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் , புனவாச லில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியில் 6 ம் வகுப்பு படித்தார் . பின்னர் பேராவூரணியில் உள்ள  அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தார் . 10 ம் வகுப்பில் 467 மதிப் பெண் பெற்று தமிழக அரசின் காமராஜர் விருது பெற்றார் . பிளஸ் 2 வில் 453 மதிப்பெண் பெற்றுள்ளார் . 


மருத் துவராக வேண்டும் என்ற லட்சியத்தால் நீட் தேர்வில் பங்கேற்றார் . இதில் 270 மதிப்பெண் பெற்றார் . ) தற்போது அரசுப் பள்ளி மாணவர்க களுக் கான 7.5 சதவீத உள் ட ஒதுக்கீட்டின்படி என் மகளுக்கு மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள் இதில் 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு மட் டுமே உள் இடஒதுக்கீடு பொருந்தும் என கூறப் பட்டுள்ளது . ஆனால் , எம் வகுப்பு மட்டும் அரசு உதவி பெறும் பள் ளியில் படித்துள்ளதால் , சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது . 


எனவே , என் மகள் 6 ம் வகுப்பு படிப்பை யும் அரசுப் பள்ளியில் படித்ததாக கருதி , மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவ ரிசைப்பட்டியலில் என் மகளின் பெயரை சேர்க்கவும் , அவருக்காக ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும் உத்தர விட வேண்டும் . ) இவ்வாறு மனுவில் கூறியிருந்தார் 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post