Title of the document

 பள்ளிக் கல்வி - நிபந்தனையின்றி க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - I ஆக தரமுயர்த்துதல் - அரசாணை வெளியீடு.

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


 பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித் துறையில் க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - II ஆக பணிபுரிந்து வரும் க‌ணி‌னி பயிற்றுநர்களை 8 ஆண்டுகள் பணி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்றி க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - I ஆக தரமுயர்த்துதல் - அரசாணை வெளியீடு.


ஆணை : ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர் தரத்தில் பணிபுரிந்து வரும் கணினி பயிற்றுநர்களை கணினி பயிற்றுநர் நிலை II என பெயர் மாற்றம் ( Re - designate ) செய்தும் , தேசிய ஆசிரியர் கல்வி குழும ( NCTE ) விதிமுறைகளில் தெரிவித்துள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் புதியதாக கணினி பயிற்றுநர் நிலை- I பணியிடங்களை ரூ .36900 - 116600 என்ற ஊதியக்கட்டில் தோற்றுவித்தும் , பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கனவே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 2689 கணினி பயிற்றுநர் பணியிடங்களில் 814 கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களை 814 காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்படைப்பதன் மூலம் தோற்றுவித்தும் , புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள 814 கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிக் கொள்ளவும் , ஏற்கனவே கணினி பயிற்றுநர் நிலை II இல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று , தேசிய ஆசிரியர் கல்வி குழும ( NCTE ) விதிமுறைகளில் தெரிவித்துள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றிருப்பின் அவர்களை கணினி பயிற்றுநர் நிலை -1 ஆக தரமுயர்த்தவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


 பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்: 103, நாள்: 05-11-2020 | Download here...


ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post