Title of the document

 நமது வலைத்தளத்திற்கு கிடைத்த தகவல் படி   நேற்று நடந்த முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் பள்ளி , கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என எழுந்துள்ள கருத்துக்கள் எதிரொலி 

 பள்ளி , கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல் 

* கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியதாக தகவல் 

* கொரோனா பரவல் , பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை என தகவல்

* வரும் 16 ஆம் தேதி 9,10,11,12 ஆம் வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.



தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், வரும் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி தமிழக அரசு அனுமதி அளித்தது. அதாவது 9 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே வகுப்புகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அதன் படி, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது.


இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. பள்ளிகளை தற்போதைக்கு திறக்க வேண்டாம் என்றும் இது சரியான தருணம் இல்லை என்றும் கருத்துக்கள் எழுவதால் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியததாகவும் கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு உரிய விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post