Title of the document

கற்போம் எழுதுவோம் இயக்கக கருத்தாளர்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி: பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம், தமிழகம் முழுவதுமுள்ள, 1.24 கோடி எழுத்தறிவற்ற, கல்லாத மக்களை, எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றும் வகையில், கற்போம் எழுதுவோம் இயக்கம் வரும், 30ல் துவங்க உள்ளது. இதையொட்டி, கருத்தாளர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி, கிருஷ்ணகிரியில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் நாராயணா திட்ட நோக்கங்கள் குறித்து பேசினார்.பயிற்சியை துவக்கி வைத்து, சி.இ.ஓ., முருகன் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 15 வயதிற்கு மேற்பட்ட, 31 ஆயிரத்து, 500 கல்லாதோர் கண்டறியப்பட்டுள்ளனர். 1,500 பள்ளிகளில் செயல்படும் கற்பித்தல் மையங்களில் தன்னார்வலர்கள் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக இந்த இயக்ககத்தின் மூலம், 11 ஆயிரத்து, 488 கல்லாதோர் பயனடைவர். ஆண்டிற்கு மூன்று தேர்வுகளும், 120 மணி நேர பாடவேளைகளும், கல்லாதோர் இருக்கும் இடத்துக்கே தன்னார்வலர்கள் நேரில் சென்று கற்பிப்பர். மாவட்ட அளவிலான பயிற்சியை தொடர்ந்து, வரும், 18 மற்றும் 19ல் கல்வி வட்டார அளவில், கற்போம் எழுதுவோம் மையங்களிலுள்ள, தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். மாநில அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள் சுந்தரலிங்கம், முருகேசன், தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர், மாவட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில், 24 ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post