Title of the document

 கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!




 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

பள்ளிக் கல்வித் துறைக்கெதிராக தொடரப்படும் வழக்குகள் மீது காலகெடுவிற்குள் துரித நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் , வழக்குகளைத் தொடர்ந்து கண்காணிக்கத் தவறும் நேர்விலும் துறைக்கு பாதகமாகத் தீர்ப்புகள் பெறப்படுகின்றன. அவ்வாறானத் தீர்ப்புகளின் மீது தொடர்புடைய விதிகளைக் குறிப்பாக சுட்டிக்காட்டி தெளிவாக பேல் முறையீடு , சீராய்வு மற்றும் சிறப்பு விடுப்பு மனு ஆகியவை உடனுக்குடன் தாக்கல் செய்யப்படாமல் நிர்வாக நலனுக்கு முரணாகத் திட்டமிட்டே காலந்தாழ்த்தி தாக்கல் செய்யும் நிலையில் நீதிமன்றங்களால் அவை ஏற்கப்படாமல் தீர்ப்பு வழங்கப்படுவதால் பல்வேறு வழக்குகளில் அரசுக்கு வீணான நிதி இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அவ்வாறான திப்புகளை பின் தொடர்ந்து பலரும் வழக்கு தொடர்ந்து ஆளைப் பெறுகின்றனர். இம்மாதிரியான அலட்சியமான செயல்பாடுகளால் அரசளவில் உயர் அலுவலர்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதோ நிர்வாகத்திலும் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. எனவே இனிவரும் காலங்களில் அலுவலர் மற்றும் பணியாளர்களது கவனக் குறைவால் துறைக்குப் பாதகமாக தீர்ப்பாணைகள் பெறப்படும் நேர்வுகளில் தொடர்புடைய வழக்குக்கு ஆகும் செலவினத் தொகையுடன் அரசுக்கு ஏற்படக் கூடிய நிதியிழப்பு முழுவதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடமிருந்தே பெறப்படும் என்பதுடன் ஒவ்வொரு வழக்கிற்கும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரே முழுப்பொறுப்பாவார்கள் எனவும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது. இதில் எவ்வித விளக்கங்களும் ஏற்கப்படமாட்டாது என பள்ளிக்கல்விித்துறை எச்சரித்துள்ளது.

ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post