Title of the document

 பள்ளிக் கல்வி - குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


 நமது வலைத்தளத்தில் கிடைத்த தகவலின்படி  பள்ளி மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதில் தற்போது குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத  பள்ளிகளின் பட்டியல் தருமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது தமிழகத்திலுள்ள அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவது அவசியமாகிறது . மேலும் அரசால் பல்வேறு நல திட்டங்கள் மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன . இருப்பினும் மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி மூலம் பள்ளிக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன . சிலப்பள்ளிகளில் மேற்கண்டவாறு குழாய் இணைப்புகள் பெற்று மாணவர் பயன்பாட்டில் இருந்து வருகின்றன என அறியமுடிகிறது . ஆனால் சில பள்ளிகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் இல்லாத நிலை உள்ளது . எனவே அதுபோன்ற பள்ளிகளின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பாக ( ஆங்கிலத்தில் Excel ) தட்டச்சு செய்து இச்செயல்முறைகள் கண்ட இரு தினங்களுக்குள் இவ்வியக்ககத்திற்கு Soft Copy யை idssed@nic.in என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் விவரத்தை இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post