கொரோனா - கல்லூரி வகுப்புகள் ஆன்லைனிலேயே தொடரும்: உயர்கல்வி துறை அமைச்சர் !!
கொரோனா வைரசின் தாக்கம் முழுவதுமாக குறையும் வரை கல்லூரி வகுப்புகள் ஆன்லைனிலேயே தொடரும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸின் தாக்கம் முழுவதுமாக குறையும் வரை இந்த கல்வி ஆண்டில் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறும். பாடத்திட்டங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக எளிதில் புரியும் வகையில் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படும் என்றார்.
மேலும், கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வு முடிவுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், மாணவ, மாணவியர்கள் மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியாக சிக்கல்களுக்கு ஆளாவதை தவிர்க்கவும், அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தனி குழு அமைக்கப்பட்டது. அனைத்து பல்கலைக் கழகங்களுடன் கலந்தாலோசித்து அதன் அடிப்படையிலேயே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. எனினும், இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இதற்கு பதில் அளிக்க முடியாது என்று கூறினார். வைரஸின் தாக்கம் முழுவதுமாக குறையும்வரை கல்லூரி வகுப்புகள் ஆன்லைனிலேயே தொடரும்: உயர்கல்வி துறை அமைச்சர் தகவல்
Post a Comment