Title of the document

 இறுதி செமஸ்டர் தேர்வை எழுதாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

 

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


 


கடந்த செப்டம்பர் இறுதியில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு (Final Semester Exam) நடைபெற்றது. கொரோனா அச்சம் மற்றும் இணையக்கோளாறு காரணமாக பல மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. எனவே இறுதி தேர்வு எழுதாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வரும் 17 முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்படும் எனவும், இந்த தேர்வுகள் ஆன்லைன் (Online Exam) மூலம் நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இணையக்கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாத மாணவர்கள் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் அல்லது மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் எனக்கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பல்கலைக்கழக மானியக் குழு சார்பில், முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது. இறுதி செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் நடத்துவோம் என தெரிவித்திருந்தது.


இந்தநிலையில், இறுதி செமஸ்டர் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வரும் 17 முதல் 21 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) அறிவித்துள்ளது.


ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post